கடும் நெருக்கடி.. பதவி விலகிய ஜஸ்டின் ட்ரூடோ! அடுத்த பிரதமர் யார்? முன்னணியில் தமிழரான அனிதா ஆனந்த்

post-img
ஒட்டாவா: காலிஸ்தான் ஆதரவு, விசா நெருக்கடி என இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது சொந்த கட்சியினர் காட்டிய எதிர்ப்பு காரணமாக பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதை அடுத்து அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் அந்த ரேசில் முன்னணியில் நிற்கிறார் தமிழரான அனிதா ஆனந்த். ரஷ்யா, அமெரிக்கா போன்று உலக அளவில் இந்தியாவிற்கு நட்பு பாராட்டும் நாடுகளின் குறிப்பிடத் தகுந்த நாடாக கனடா இருக்கிறது. இந்தியாவுடன் மிக நெருக்கம் காட்டி வந்தார் அந்நாட்டின் பிரதமர் ஆன ஜஸ்டின் ட்ரூடோ. குறிப்பாக தீபாவளி, பொங்கலுக்கு வாழ்த்து சொல்வது, வேட்டி சட்டையில் நிகழ்வுகளில் பங்கேற்பது என ட்ரூடோ ஒரு இந்தியர் போலவே காட்டிக் கொண்டார். இந்த நிலையில் நாட்கள் செல்ல செல்ல அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. ஜஸ்டின் ட்ரூடோ: கனடாவில் இரண்டாவது பெரிய சமூகமாக சீக்கியர்கள் இருக்கும் நிலையில், அவர்களது ஆதரவை பெற நினைத்த ஜஸ்டின் ட்ரூடோ அவர்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளித்தார். ஆனால் இந்தியாவில் காலிஸ்தான் தனி நாடு கேட்கும் காலிஸ்தானிகளுக்கு கனட அமைச்சரவையில் இடம் கொடுத்த நிலையில் அவர்கள் கனட அரசியலில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். தொடர்ந்து சீக்கியர்கள் ஆதரவுடன் 2021 தேர்தலில் ட்ரூடோ பெரு வெற்றி பெற்றார். காலிஸ்தான் ஆதரவு: இந்த நிலையில் தான் 2023 காலிஸ்தான் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதிருந்து இந்தியா - கனடா உறவில் விரிசல் விழத் தொடங்கியது. இந்த நிலையில் இந்திய மாணவர்களுக்கு விசா, காலிஸ்தான் ஆதரவு என இந்தியாவுக்கு எதிராக செயல்பட தொடங்கியதைத் தொடர்ந்து அவரது லிபரல் கட்சி நிர்வாகிகளை எதிர்ப்பை தெரிவித்தனர். பிரதமர் பதவி ராஜினாமா: மேலும் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என நெருக்கடி கொடுத்தனர். இந்த ஆண்டு அக்டோபரில் கனடாவில் பிரதமர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் லிபரல் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். மார்ச் மாதம் வரை நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கும் நிலையில் அடுத்த பிரதமர் யார்?என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அடுத்த பிரதமர் யார்?: தற்போது எட்டு பேர் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருக்கும் நிலையில் இரண்டு பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்துக்கு பிரதமர் பதவி கிடைக்கலாம் என கூறப்படுகிறது. அடுத்த பிரதமருக்கான போட்டியில் முதல் ஐந்து இடங்களில் இருப்பவர்களில் அனிதா ஆனந்த் முக்கியமானவர். போக்குவரத்து மற்றும் கனடா வர்த்தகத் துறை அமைச்சராக இருக்கும் அவர், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். அனிதா ஆனந்த்: தற்போது 57 வயதாகும் அனிதா ஆனந்த் 2010 ஆம் ஆண்டிலிருந்து அரசியலில் இருக்கிறார். குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆய்வு, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டவியல், டல்ஹௌசி பல்கலைக்கழகத்தில் சட்டம், தொடர்ந்து டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டம் பயின்ற அவர் நோவாஸ்கோர்சியாவில் பிறந்தவர். அவரது தாய் சரோஜ், தந்தை ஆனந்த் ஆகிய இருவரும் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாய்ப்பு பிரகாசம்: கனடாவின் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்த அவர், உக்ரைன் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு நிலைப்பாடுகளில் உறுதியாக இருந்தவர். இந்த நிலையில் தான் கனடாவின் அடுத்த பிரதமராக அவர் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post