நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது, போதிய அளவு தூங்காமல் இருப்பது, சரியான உணவுமுறை பின்பற்றாத சூழல் போன்றவை பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதில் குறிப்பாக, தூக்கமின்மை உடனடியாக முகத்தில் தெரியும். குறிப்பாக, கருவளையம் மற்றும் வீக்கமான கண்கள் ஆகிய இரண்டுமே பரபரப்பாக வேலை செய்யும் பலருக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. ஒரு பக்கம் பிசியான வாழ்க்கை முறை இதற்கு காரணமாக இருந்தாலும், மற்றொரு பக்கம் ஒரு சில காரணங்களால் ரத்த நாளங்கள் டைலூட் ஆகி, கருவளையத்தை உண்டாக்குகிறது.
உங்களுக்கு கருவளையமோ அல்லது கண்களுக்கு கீழ் வீக்கமோ இருந்தால் அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்த சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம். இது தவிர ஸ்கின் கேர், ஹேர் கேர் போல ஐ-கேர் அதாவது கண்களையும் பரமாரிப்பது, அதற்காக ஒரு ரொட்டீனைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம். இந்த சூழ்நிலையில், கருவளையம் மற்றும் கண்களில் ஏற்படும் வீக்கத்தை போக்க ஒரு சில டிப்ஸ்.
ஹைப்பர் பிக்மண்டேஷன்: உங்கள் உடல் இயற்கையாகவே அதிகமாக மெலனின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்தால் கண்களில் கருவளையம் ஏற்படக்கூடிய சாத்தியமே இருக்கிறது. மெலனின் என்பது நம் உடலை அல்ட்ரா வயலட் கதிர்களிலிருந்து பாதுகாக்கும், அதே நேரத்தில் கருவளத்தையும் உண்டாக்கும்.
ஹைப்பர் பிக்மண்டேஷன்: உங்கள் உடல் இயற்கையாகவே அதிகமாக மெலனின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்தால் கண்களில் கருவளையம் ஏற்படக்கூடிய சாத்தியமே இருக்கிறது. மெலனின் என்பது நம் உடலை அல்ட்ரா வயலட் கதிர்களிலிருந்து பாதுகாக்கும், அதே நேரத்தில் கருவளத்தையும் உண்டாக்கும்.
இரும்புச்சத்து குறைப்பாடு: இரும்புச்சத்து குறைபாடு உடலில் பல விதங்களாக வெளிப்படும். அனீமியா என்று கூறப்படும் இந்த சத்து குறைபாடு உடலில் போதிய அளவு ரெட் பிளட் செல்ஸ் இல்லாததால் ஏற்படுகிறது. இந்த செல்கள் உடல் முழுவதும் ரத்தத்தில் ஆக்சிஜனை கொண்டு செல்ல ஹிமோகுளோபின்-ஐ பயன்படுத்துகிறது. சிவப்பு ரத்த அணுக்கள் குறைவாக இருக்கும் பொழுது கண்களுக்கும் ரத்தஓட்டம் குறையும். எனவே இயற்கையாக முகம் பொலிவிழந்து, கண்கள் சோர்வாகக் காணப்படும்.
தூக்கத்தை சரி செய்வதன் மூலம், போதிய ஓய்வு எடுப்பதன் மூலமாகவும் கருவளையத்தை குறைக்க முடியும். சத்துக் குறைபாடு இருந்தால், அதற்கான உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும், உங்கள் சருமத்தை பொலிவாக்கவும் மற்றும் அதனை ஆரோக்கியமாக வைக்கக்கூடிய சரியான க்ரீம் மற்றும் சீரம் போன்றவற்றை கண்டறிந்து அதனை பயன்படுத்துவது உதவும்.