வீட்டிலேயே கேக் மற்றும் டெஸர்ட்ஸ் செய்ய நீங்கள் நினைக்கும் நேரத்தில் வீட்டில் முட்டைகள் இல்லையா..? கவலை வேண்டாம். இங்கே முட்டைகளுக்கு பதில் பயன்படுத்த கூடிய அற்புதமான மாற்றுகள் உள்ளன. கீழே நாம் பார்க்க போகும் முட்டைகளுக்கு மாற்றான சில விஷயங்கள் உங்கள் பேக்கிங் அனுபவத்தை அற்புதமாக்கும்.
பேக்கிங் பவுடர் மற்றும் ஆயில் : 1.5 டேபிள் ஸ்பூன் வெஜிடபிள் ஆயிலை எடுத்து அதை 1.2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் மற்றும் 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடருடன் கலக்கவும். முட்டைகள் இல்லாத குறையை இந்த மிக்ஸிங் போக்கும்.
மசித்த வாழைப்பழம் : கேக் அல்லது பான்கேக்ஸ் தயாரிக்க ஒரு பெரிய முட்டைக்கு பதிலாக, மீடியம் சைஸ் பழுத்த வாழைப்பழத்தை மசித்து பயன்படுத்தலாம்.
ஆளி விதை பவுடர் : 1 டேபிள் ஸ்பூன் ஆளி விதை பவுடரை 3 டேபிள் ஸ்பூன் தண்ணீருடன் சேர்த்து கலக்கி சும்மர் 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். இந்த மிக்சிங் ஒரு பெரிய முட்டைக்கு சமம்.
கன்டென்ஸ்டு மில்க் : நிபுணர்களின் கூற்றுப்படி, கன்டென்ஸ்டு மில்க்கின் one-quarter அளவு, கேக்கில் ஒரு முட்டைக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
ஆரோரூட் பவுடர் : ஒரு முட்டைக்கு பதிலாக இந்த பவுடரை 2 டேபிள் ஸ்பூன் எடுத்து கொன்டு, 3 டேபிள்ஸ்பூன் தண்ணீருடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
ஆப்பிள் சாஸ் : பேக்கர்ஸ்களின் கூற்றுப்படி, ஒரு கால் கப் அன்ஸ்வீட்ன்ட் ஆப்பிள் சாஸ்-ஐ (unsweetened apple sauce), ஒரு முட்டைக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
யோகர்ட் : ஒரு கால் கப் வெற்று ப்ளெயின் யோகர்ட், ஒரு பெரிய முட்டைக்கு சமம்.
கார்போனேட்டட் வாட்டர் : பிரெட் மற்றும் கேக்ஸ் தயாரிக்கும் போது 1/4 கப் கார்பனேட்டட் வாட்டரை, ஒரு முட்டைக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.