தஞ்சாவூர் அடுத்த தெத்துவாசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்த இவர் தற்போது இயற்கை விவசாயம் செய்துமுழு நேர விவசாயியாக மாறி வருகிறார்.
தொடக்கத்திலேயே விவசாய குடும்பத்தைச் சார்ந்த இவருக்கு கல்லூரி படிப்பின் போது இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. அதனை அடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாகஇவரிடம் உள்ள சுமார் 2 அரை ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் காய்கறி, வாழை சாகுபடி செய்து வருகிறார் மேலும் ஒரு ஏக்கரில் பல வகையான மரங்களையும் வளர்த்துஉணவுக்காடாகஉருவாக்கி வருகிறார். இயற்கை விவசாயத்தில் இவர் செய்து வரும் காய்கறி சாகுபடி முறையை பற்றி இந்த சிறப்பு தொகுப்பில் பார்ப்போம்.
இயற்கை முறையில் காய்கறி சாகுபடி
காய்கறிகளில் தான் முதலில் அதிக கவனம் செலுத்தினோம். அதில்தான் ரசாயனம் அதிகம் கலக்கப்படுகிறது. ரசாயனம் இல்லாத காய்கறிகளைமக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.அப்படி செய்யும் போது விற்பனை முறையில் எங்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. பாதியிலேயே விட்டுவிடலாம் என்று எண்ணினோம். ஆனால்மக்கள் எங்களை விடவில்லை நேரடியாக தோட்டத்திற்கே வந்து பலர்காய்கறிகளை வாங்கி சென்றனர்.
அந்த நம்பிக்கையில் 80 சென்ட் இடத்தில் கலப்பு காய்கறிகளை சாகுபடி செய்தோம்.80 சென்டில் இரண்டு தென்னை மரத்திற்கு இடையில் ஒரு காய்கறி என்று பயிரிட்டோம்.அதாவது 80 சென்ட் இடத்தை ஐந்து பகுதிகளாக பிரித்து வெண்டைக்காய், கொத்தவரங்காய், மணப்பாறை கத்தரி, வேலி ஓரங்களில் மக்காச்சோளம், சிவப்பு மக்காச்சோளம், பல நிறச்சோளம், காராமணி மற்றும், கீரை வகைகளைநட்டுள்ளோம். காய்கறிகள் மற்றும் சோளம் ஆகியவற்றிலிருந்து விதைகளை பிரித்தெடுத்து மரபு விதைகளை விற்பனையும் செய்து வருகிறோம்.
ரசாயன நிலத்தை மாற்றினோம்
ரசாயனம் நிறைந்து இருந்த நிலத்தை ஆர்கானிக் முறையில் மாற்றுவதற்காக முடிவெடுத்தோம். அதற்காக ஆழ்வார் அடிக்கடி சொல்லும் தத்துவத்தை பின்பற்றினோம். அதற்காக நிலம் முழுவதும் பல தானிய பயிர்களை பயிரிட்டோம் 40 - 90 நாட்கள் கழித்து அந்த பயிர்களை அப்படியே நிலத்தில் உழவு செய்தோம். அப்படி செய்தபோது மண்ணில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. எப்போதும் இல்லாத அளவில் பயிர்கள் அடர் பச்சையாக வளர்ந்தது.மண் வளம் உயர்ந்தது.
குடும்பத்தினரின் ஒத்துழைப்பு
தொடக்கத்தில் இயற்கை விவசாயம் செய்யப் போகிறேன் என்று ஆரம்பித்த நாளிலிருந்து குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இன்று வரை இருந்து வருகிறது.அப்பா அம்மா தங்கைகள் என அனைவரும் நிலத்தில் வந்து ஒன்றாக சேர்ந்து வேலை செய்வோம்.
விற்பனைமுறையின் போது சிக்கல்கள் அடிக்கடி ஏற்பட்டது அப்போதுதான் மக்களிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கு ஒரு சிறந்த வழி கிடைத்தது. ஒவ்வொரு ஊரிலும்வாரவாரம் சந்தைகள் நடக்கும் அங்கு எங்கள் காய்கறிகளைபற்றி நேரடியாக மக்களிடம் கூறிவிற்பனை செய்தோம். காய்கறிகளின் ருசியை அறிந்து தற்போது தோட்டத்திற்கே வந்துபலர் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
வருமானம் எவ்வளவு?
வெண்டைக்காய் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை செய்வதால்10-15கிலோ வரை கிடைக்கும் மார்க்கெட் விலைக்கு ரூ. 20 -க்கும்மக்களிடம் ரூ.40-க்கும்தருகிறோம். 4 மாதத்தில் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்துள்ளோம்.
தற்போது வெண்டைக்காயிலிருந்துமட்டும் வாரத்திற்கு 3-4 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. மேலும் மரபு விதைகளைவிற்பனை செய்வதன் மூலம் அதிலிருந்தும் வருமானம் கிடைக்கும். இதுபோன்று பல காய்கறிகளை திட்டமிட்டு ஆர்கானிக் முறையில் மக்களுக்கு நல்ல காய்கறிகளை நேரடியாக வழங்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருக்கிறது.