180 கிமீ வேகத்தில் சென்றபோது நடந்த விபத்து! அப்படியே சுழன்ற ரேஸ் கார்! அஜித் தற்போது எப்படி உள்ளார்?

post-img
துபாய்: துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நடிகர் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளானது. தடுப்புச்சுவரில் மோதி சுழன்றடித்து கார் நின்ற நிலையில் அஜித்குமாருக்கு என்ன ஆனதோ என பலரும் பதறினர். ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த வித காயமுமின்ற அஜித்குமார் உயிர்பிழைத்துள்ளார். இதுபோன்று பயிற்சியின் போது விபத்துக்கள் நடப்பது என்பது இயல்பானது தான். அஜித்குமார் நலமுடன் இருக்கிறார். விபத்து நடக்கும் போது மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் காரை அஜித் ஓட்டினார் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளார். நடிகர் அஜித் குமார் கார் மற்றும் பைக் ரேஸ் பிரியர். சூட்டிங் தவிர பிற நேரங்களில் ரேசில் ஈடுபடுவது, பைக்கில் நீண்ட தூரம் டிராவல் பண்ணுவது, ரேஸ் காரிகளில் செல்வதை வாடிக்கையாக கொண்டிருப்பார். தற்போது நடிகர் அஜித்குமார் கமிட்டான இரண்டு படங்களிலும் நடித்து முடித்துள்ளார். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. விடாமுயற்சி படத்தின் டிரைலர் மற்றும் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. இதேபோல் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடக்கும் நிலையில், திரைப்படமானது வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பு 2025 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாக இருப்பதால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்தனர். இந்த நிலையில் தான் அஜித் ரசிகர்களுக்கு கவலை அளிக்கும் விதமாக துபாயில் கார் ரேஸ் பயிற்சியின் போது அஜித்குமார் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடல்நிலை எப்படி உள்ளது என்று கவலையடைந்தனர். ஆனால் அஜித்குமாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை நலமுடன் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி, குட் பேட் அக்லி இரண்டு படங்களிலும் நடித்து முடித்துள்ள நடிகர் அஜித்குமார், துபாய் மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் உள்ள பல்வேறு நாடுகளில் நடக்கும் 24 ஹெச் சாம்பியன்ஷிப் கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக கார் ரேஸ் அணி தலைவராகவும், ஓட்டுனராகவும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டியில் அஜித்குமாரும் பங்கேற்க இருப்பதாக வந்த தகவலால் அஜித் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் அஜித்குமார் ஈடுபட்டு இருந்தார். இதில் எதிர்பாராத விதமாக அவரது கார் விபத்துக்குள்ளாகியது. அஜித்குமார் கார் ரேஸ் பயிற்சியின் போது விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சியானது வெளியாகியுள்ளது. அதில் மின்னல் வேகத்தில் செல்லும் அவரது கார், நொடிப்பொழுதில் தடுப்புச்சுவரில் மோதி சுழன்றடித்து நிற்கிறது. இதில் காரின் முன்புறமும், பின்புறமும் பலத்த சேதமடைந்தது. Ajith Kumar’s massive crash in practise, but he walks away unscathed. Another day in the office … that’s racing!#ajithkumarracing #ajithkumar pic.twitter.com/dH5rQb18z0 எனினும் நடிகர் அஜித்குமார் தலையில் ஹெல்மட் அணிந்தபடி உள்ளே இருந்ததால் எந்த வித காயமும் இன்றி உயிர் தப்பினார். அவரை ஊழியர் ஒருவர் காரில் இருந்து வெளியே அழைத்து செல்வது போன்ற வீடியோ காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த நிலையில் அஜித்குமார் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:- துபாயில் வரும் 12 ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கும் போட்டியில், அஜித்குமார் உள்பட ஏகே மோட்டார் ரேசிங் குழுவினர் பங்கேற்க இருக்கிறார்கள். இது தொடர்பாக நடந்த பயிற்சியில் இன்று அஜித்குமார் பங்கேற்று இருந்தார். இதில் எதிர்பாராத விபத்து நடந்துவிட்டது. 180 கிமீ வேகத்தில் கார் சென்றுகொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. எனினும் அஜித்குமாருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. அவரது கார் சேதமடைந்தது. அவரே விபத்து நடந்த காரில் இருந்து வெளியே வந்தார். அஜித் கார் மட்டும் இன்றி மற்றொரு காரும் இன்று விபத்துக்குள்ளாகியது. இதுபோன்று பயிற்சியின் போது விபத்துக்கள் நடப்பது என்பது இயல்பானது ஒன்று தான். அஜித்குமார் நலமுடன் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post