டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு லோக்சபாவில் எதிர்கக்ட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது; அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்; மாநில அரசுகளின் பதவிக் காலத்தை குறைக்க அதிகாரம் எதுவும் இல்லை எனவும் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட கட்சிகள் லோக்சபாவில் இந்த மசோதாவுக்ககு எதிர்ப்புத் தெரிவித்து உடனே வாபஸ் பெர வேண்டும் என வலியுறுத்தின.