எதிர்நீச்சல்: குணசேகரன் ஆக மீண்டும் வந்த மாரிமுத்து.. கையில் அதை கவனிச்சீங்களா?

post-img

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் மீண்டும் குணசேகரன் ஆக மாரிமுத்து கடைசி நேரத்தில் மிரட்டி இருந்தார்.
நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு பிறகு அவருடைய ரசிகர்கள் அவரை சீரியலில் அதிகமாக மிஸ் பண்ணி இருந்த நேரத்தில் நேற்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி சீரியல் டீம் கொடுத்திருந்தனர்.


அதே நேரத்தில் நேற்று எபிசோடில் என்ன எல்லாம் நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நேற்றைய எபிசோடின் ஆரம்பத்தில் நந்தினி தான் வாங்கிக் கொண்டு வந்த பொருட்களை எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது நந்தினி வைத்திருந்த பையைப் பார்த்து இது என்ன பிரசாதமா? எனக்கும் வேண்டும் என்று கரிகாலன் கேட்க இது பொம்பளைங்க பிரசாதம் இதை உனக்கு தர முடியாது என்று நந்தினி சொல்ல, அது என்ன பொம்பளைங்க பிரசாதம் என்று கதிர் எப்போதும் போல கத்திக்கொண்டு சண்டைக்கு வந்தார்.

 

அப்போ பக்கத்தில் இருந்த ஞானம் இவங்க பண்றது எல்லாம் ஏதோ கூட்டு சதியா தெரியுது ஆனா பொறுத்திருந்து பார்ப்போம்டா இவங்க கிட்ட இப்போதைக்கு எதுவும் பிரச்சனை பண்ண வேண்டாம் வா போவோம் என்று கூட்டிக்கொண்டு போயிருந்தார். அதைத்தொடர்ந்து தான் வாங்கிட்டு வந்த வெற்றிலையை விசாலாட்சி இடம் கொடுத்து நந்தினி சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். அதுபோல ஆதிரைக்கு தான் வாங்கிட்டு வந்த பொருட்களை கொடுத்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் கரிகாலன் வந்து நான் அந்த பொருளை பார்க்க வேண்டும் என்று பிரச்சனை செய்தார்.


அப்போது இதை பாக்க கூடாதுன்னு நான் சொல்லி இருக்கேன் இல்ல. நீ பார்த்தா உன் கண்ணு தெரியாம போய் விடும் என்று விசாலாட்சி கரிகாலனை ஏமாற்றி இருந்தார். ஆனாலும் கரிகாலன் அதை நம்பியதாக தெரியவில்லை. அதைத்தொடர்ந்து ஈஸ்வரி மோட்டிவேஷன் ஸ்பீக்கிங் கொடுக்கப்போன இடத்தில் அங்கு நான் இதை இலவசமாக செய்கிறேன் நான் ஒரு சேவையாக செய்ய வேண்டும் என்று அந்த டிரஸ்ட்டில் கூறிக் கொண்டிருந்தார்.


அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வெண்பா வந்துவிட ஈஸ்வரி அம்மா என்று அந்தக் குழந்தை கொஞ்சி விளையாடி கொண்டிருப்பதை பார்த்து தர்ஷன் முதலில் முகம் மாறுகிறார். பிறகு தர்ஷனிடம் நானும் உங்களுக்கு தர்ஷினி அக்கா மாதிரி நானும் உங்களுக்கு ஒரு தங்கச்சி தான் என்று சொல்லி அவருடைய மனதையும் வெண்பா மாற்றி விடுகிறார். பிறகு அப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்தது வாங்க அப்பாவை பார்த்துட்டு போகலாம் என்று சொல்ல பிறகு ஜீவானந்தமும் அங்கு வந்து சேர்ந்து விடுகிறார்.


அப்போ எல்லாரும் டீ குடித்துக் கொண்டிருக்கும் போது ஜீவானந்தத்திடம் தர்ஷன் உங்கல பத்தி அப்பா சித்தப்பா எல்லாரும் தப்பு தப்பா பேசும் போது நான் கூட முதலில் நம்பிட்டேன். இப்போ உங்களை நேரில் பார்க்கும்போது தான் நீங்க அப்படி இல்லை என்று தெரிகிறது என்று சொல்ல, பிறகு எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அவர்களுடைய திறமைக்கு நாமதான் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று ஜீவானந்தமும் தர்ஷனிடம் பேசிக் கொண்டிருந்தார்.


அதைத் தொடர்ந்து அப்பத்தாவிடம் தான் வாங்கிட்டு வந்த புக்கை கொடுத்து நந்தினி சந்தோஷப்பட அப்பத்தாவும் பாராட்டி கொண்டு நீ உன் மாமியாருக்கு என்ன வாங்கி கொடுத்த என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். பிறகு அப்பத்தாவும் நந்தினி இடம் கிண்டலாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது எப்போ ஈஸ்வரி அக்கா வருவாங்கன்னு தெரியலையே என்று நந்தினி ஆர்வத்தோடு காத்திருக்க, அதற்கு ரேணுகா கிண்டல் செய்கிறார். பிறகு ஈஸ்வரியும் வந்துவிட ஈஸ்வரியிடம் சந்தோஷமாக நந்தினி பேசிக் கொண்டிருக்கிறார்.

 

இதற்கிடையில் விசாலாட்சி இடம் நந்தினி தான் வாங்கிட்டு வந்த வெற்றிலையை கொடுத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கும்போது கூட, " மெதுவா பேசுங்கடி, மேலேதான் என் மகன் தூங்கிக்கொண்டு இருக்கான். அவன் காது முழுக்க இங்க தான் இருக்கும்" என்று பேசி இருந்தார். அதை தொடர்ந்து சீரியலின் கடைசி நேரத்தில் குணசேகரன் மாடியில் இருந்து பார்ப்பது போன்று காட்சிகள் இருந்தது. இது ஏற்கனவே எடுத்து வைத்த கிளிப்சுகள் தான். ஆனால் இதற்கு பிஜிஎம் மற்றும் மிரட்டலான காட்சிகளோடு சேர்ந்து நேற்று மாரிமுத்து மீண்டும் குணசேகரன் ஆக சீரியலில் வந்திருந்தார்.


அதே நேரத்தில் அந்த கிளிப்சுகளில் கையில் குணசேகரன் சிவப்பு கலர் கயிறு கட்டி இருக்கிறார். அப்படி பார்க்கும்போது இது ஆரம்பத்தில் எடுத்து வைத்த கிளிப்ஸிகளாகத்தான் இருக்கும். அதை வைத்து இன்றைய எபிசோடில் மீண்டும் மாரிமுத்து வருவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Related Post