"கேஷ் லெஸ் பஸ்".. பர்ஸில் காசு இன்றியே தமிழக பஸ்களில் இனி பயணிக்கலாம்.

post-img

 சென்னை: சென்னை, மதுரை, கோவையில் கேஷ் லெஸ் பஸ் பேருந்து என்ற புதிய கட்டண முறை ஒன்று விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக 3 நகரங்களில் கொண்டு வந்துவிட்டு அதன்பின் தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்த முடிவு செய்துள்ளனர்.

நாடு முழுக்க பல சேவைகள் தற்போது கேஷ் லெஸ் சேவைகளாக மாறியுள்ளன. அதாவது நேரடியாக பணத்தை கொடுக்காமல் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதியாகும். தமிழ்நாட்டிலும் பல்வேறு சேவைகளுக்கு யுபிஐ சேவை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் ஏடிஎம் செல்லாமலே எளிதாக யுபிஐ மூலம் பணம் செலுத்த முடிகிறது.

யுபிஐ சேவை: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் கேஷ் லெஸ் முறை கொண்டு வரப்பட உள்ளது இரண்டு வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் விஷயம் நடத்துனரிடம் இருக்கும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும் முறை.

கடைகளில் க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்துவது போலவே இதிலும் செலுத்த முடியும். இது போக அரசு பேருந்துகளில் கார்டுகளை வைத்து பயணிக்க முடியும். இது மெட்ரோ பாஸ் போல செயல்பட கூடியது ஆகும். மெட்ரோவில் நாம் மாதம் தொகை செலுத்தி பாஸ் பயன்படுத்துவோமே அதேபோல்தான் இதுவும் செயல்படும். பேருந்து டிப்போக்களில் இந்த கார்டுகளை நாம் வாங்கிக்கொள்ள முடியும்.

வருகிறது கார்டு: அதில் இருக்கும் எண்ணுக்கு நாம் ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்ய முடியும். பின்னர் அந்த கார்டை வைத்துக்கொண்டு அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் போது நடத்துனர் வைத்து இருக்கும் மெசிஜினில் காட்டினால் போதும். அவரிடம் என்ன இடம் என்று சொன்னால் அவர் நம்முடைய கார்டை ஸ்கேன் செய்துவிட்டு டிக்கெட்டை கொடுப்பார். இதன் மூலம் எளிதாக பணம் இன்றி நாம் பயணம் செய்ய முடியும்.

பணம் சென்று சேரும்: அரசுக்கும் நேராக உடனுக்குடன் பணம் சென்று சேரும். மெட்ரோவில் இருக்கும் இந்த திட்டம் சென்னை, மதுரை மற்றும் கோவை மாநகர அரசு பேருந்துகளில் கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 9 ஆயிரம் பேருந்துகளில் இந்த சேவை கொண்டு வரப்பட உள்ளது. 20 ஆயிரம் மெஷின்கள் இதற்காக வாங்கப்பட உள்ளது. மொத்தம் 40 லட்சம் பேர் தினசரி இந்த சேவையை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

இதற்காக அடுத்த 5 வருடத்திற்கு 85 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது. இதனால் மக்களின் பயணம் எளிதாகும். டிக்கெட்டிற்கு பதிலாக க்யூ ஆர் கோட் அடங்கிய சீட் இதில் பயணிகளுக்கு வழங்கப்படும். இந்த திட்டம் வரவேற்பு பெற்றால் இதே கார்டை மெட்ரோ, மின்சார ரயில் டிக்கெட்டிலும் பயன்படுத்தும் வசதியை தமிழ்நாடு அரசு கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. அதாவது மொத்தமாக இதை ரீசார்ஜ் செய்து மூன்றுக்கும் இந்த கார்டை பயன்படுத்த முடியும்.

முதல் கட்டமாக 3 நகரங்களில் கொண்டு வந்துவிட்டு அதன்பின் தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்த முடிவு செய்துள்ளனர். சென்னையில் எல்லா பேருந்துகளிலும் இந்த கேஷ் லெஸ் வசதி கொண்டு வரப்பட உள்ளதாம்.

 

Related Post