நான் தற்கொலை என செய்தி வந்தால்.. அது திட்டமிட்ட கொலை.. டிடிஎஃப் வாசன் கண்ணீர்

post-img

நான் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்தால் அதை நம்பாதீர்கள், அது திட்டமிட்ட கொலையாக இருக்கும் என பைக் யூடியூபர் டிடிஎஃப் வாசன் பகீர் கிளப்பியுள்ளார்.

 

Twin throttlers எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார் கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன். இவர் அதிக சிசி கொண்ட பைக்குகளில் சாதனை பயணம் மேற்கொள்வதை வீடியோவாக எடுத்து போடுவார். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

நிறைய பேர் இவரது சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இவர் எங்காவது நிகழ்ச்சிக்கு சென்றால் இவரை பார்க்க போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு ரசிகர்கள் கூடி விடுகிறார்கள். இது குறித்து பல முறை போலீஸார் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் ஜிபி முத்துவை தனது இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து இரு கைகளையும் விட்டுவிட்டு வாகனத்தை இயக்கினார். மேலும் ஜிபி முத்துவுக்கு ஹெல்மெட் போட்டு கூட அழைத்து செல்லவில்லை. ஏற்கெனவே இவர் அதிவேகத்தில் வாகனம் ஓட்டி இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருந்து வருகிறார் என புகார்கள் எழுந்துள்ளன.

மேலும் இவரை கைது செய்ய வேண்டும் என்றும் வியூஸ்களுக்காக ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டுவது பிறருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் மஞ்சள் வீரன் என்ற படத்தில் கதாநாயகனாக வாசன் நடிக்கிறார். இதற்காக பர்ஸ்ட் லுக் வெளியானது.

இந்த நிலையில் இவர் அண்மையில் சென்ற கார், சென்னையில் விபத்தில் சிக்கியது. இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் டிடிஎஃப் வாசன் வீடியோ ஒன்றை வெளியானது. அதில் அண்மையில் கார் விபத்து ஏற்பட்டது குறித்து பலர் பல வகையான தகவல்களை கூறி வருகிறார்கள். நான் கார் ஓட்டியதாக கூறுகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை.

நான் கார் ஓட்டவே இல்லை. இயக்குநர்தான் கார் ஓட்டினார். அது போல் நான் மது அருந்திவிட்டு கார் ஓட்டியதாக செய்திகள் வெளியாகின. இன்னும் சிலர் விபத்தை ஏற்படுத்திவிட்டு நான் ஆட்டோவில் தப்பி ஓடியதாவும் சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லை. மனசாட்சியே இல்லாமல் உண்மை என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் இப்படி கூறலாமா.

என்னை எவ்வளவு புண்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு புண்படுத்தி வருகிறார்கள். என்னை தற்கொலைக்கு தூண்டும் வகையில் பலர் செயல்படுகிறார்கள். எதிர்காலத்தில் நான் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானால் அதை யாரும் நம்ப வேண்டாம். அது திட்டமிட்ட கொலை என உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். அவரது அந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post