நாடு முழுக்க உள்ள அரசு ஊழியர்களுக்கு.. காத்திருக்கும் புத்தாண்டு பரிசு.. மோடி எடுக்க போகும் முடிவு?

post-img
சென்னை: 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும். பொதுவாக ஜனவரி மாதமே இந்த அறிவிப்புகள் வருவது இல்லை. ஆனால் இந்த முறை ஜனவரி மாதமே.. பெரும்பாலும் ஜனவரி இறுதிக்குள் இதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை-டிசம்பர் 2024 காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஆகியவற்றை மத்திய அரசாங்கம் 3 சதவீதம் உயர்த்தியுள்ளது. DA/DR உயர்வு காரணமாக மொத்த கொடுப்பனவு அடிப்படை ஊதியத்தில் 53 சதவீதத்தைத் தொட்டு உள்ளது. இந்த நிலையில்தான் அடிப்படை சம்பளத்துடன் DA விரைவில் இணைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அடிப்படை சம்பளம் - டிஏ இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக 2004ல், அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டிய பிறகு, அடிப்படை ஊதியத்துடன் DA இணைக்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக அகவிலைப்படி 50 சதவீத அளவை மீறிய போதிலும், அடிப்படை ஊதியத்துடன் DA இணைக்கப்படாது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில்தான் அடிப்படை சம்பளத்துடன் DA விரைவில் இணைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக அகவிலைப்படி 50% தாண்டினால்.. அதை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பார்கள். இதனால் வரும் ஜனவரி மாதத்திற்குள் இரண்டும் இணைக்கப்படலாம் என்று தகவல் வருகிறது. ஏற்கனவே உயர்த்தப்பட்ட சம்பளம்: ஏற்கனவே ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வர வேண்டிய மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணம் (டிஆர்) 3% உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அகவிலைப்படி உயர்வால் நாடு முழுவதும் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். DA மற்றும் DR இன் அதிகரிப்பு, ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு அதிகரிக்கும் செலவுகளைச் சமாளிக்க உதவும். அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த முடிவால் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.9,448 கோடி செலவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக DA மற்றும் DR இரண்டும் ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படும், பொதுவாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தப்படும். கடந்த முறை அகவிலைப்படின் உயர்வு மார்ச் 2024 இல் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் 4% உயர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது 3% செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் உயர்வு: இந்த நிலையில்தான் மீண்டும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும். பொதுவாக ஜனவரி மாதமே இந்த அறிவிப்புகள் வருவது இல்லை. ஆனால் இந்த முறை ஜனவரி மாதமே.. பெரும்பாலும் ஜனவரி இறுதிக்குள் இதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையும் இந்த 3% டிஏ உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக ஒரு ஊழியருக்கு ரூ.30,000 மாதச் சம்பளமாக இருந்தால், அதில் அடிப்படை ஊதியமாக ரூ.18,000 இருந்தால், அவர்கள் தற்போது ரூ.9,000 டிஏவாகப் பெறுவார். ஜனவரி மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

Related Post