நடிகை ரச்சித்தா மகாலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
அந்த தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பிரிந்தனர்: இவர்களது திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாச்சியார் என்ற சீரியலில் இருவரும் சேர்த்து நடித்திருந்தனர். அதன்பிறகு ஏற்பட்ட ஒரு சில கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரச்சிதா தனது திருமண வாழ்க்கை குறித்து எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். மேலும், ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க ஆசைப்பட்டு வருவதாகவும், தனது அம்மா தான் எல்லாம் என்றும் பல நேரத்தில் கண்ணீர் மல்க பேசி இருந்தார்.
கணவர் மீது புகார்: இதையடுத்து நடிகை ரச்சித்தா மாங்காடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், கணவர் தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். கடந்த சில நாட்களாக தினேஷ் எனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புகிறார், பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் தினேசை விசாரணை நடத்தினர். அப்போது சட்டப்படி நாங்கள் இன்னும் பிரியவில்லை, வேண்டுமானால், ரச்சிதா விவாகரத்து பெற நீதிமன்றத்திற்கு செல்லலாம் என கூறிவிட்டதாக தகவல் வெளியானது.
பதில் அனுப்பியது இல்லை: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த தினேஷ், நாங்கள் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக இரண்டு வருடமாக பிரிந்து வாழ்த்து வருகிறோம். இரண்டு வருடமாக அவரிடம் சமாதானம் ஆகிவிடலாம் என்று பல முறை அவருக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறேன். ஆனால், அவற்றில் ஒன்றுக்கு கூட ரச்சிதா எனக்கு பதில் அனுப்பியது இல்லை.
இனி வாய்ப்பே இல்லை: அதே போல் தான் நான் இப்போதும் மெசேஜ் அனுப்பினேன், அதில் ஆபாசமாகவோ, திட்டியோ மெசேஜ் அனுப்பவில்லை. எப்படியாவது ரச்சிதாவுடன் சேர்ந்துவாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவர் காவல் நிலையத்தில் நடந்து கொண்டதை பார்க்கும் போது இனி சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்பதை புரிந்து கொண்டேன் என்று நடிகர் தினேஷ் மன வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.