உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன திருவிழாவையொட்டி, ஜூன் 24ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கனகசபை மீது ஏறி வழிபட தடைவிதிக்கப்படுவதாக தீட்சிதர்கள் சார்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. இவ்விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், அப்பலகையை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனகசபையின் கதவுகளை திறக்க தீட்சிதர்கள் மறுத்துவிட்ட நிலையில், 4-வது நாளாக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனிடையே, நேற்று மாலை கனகசபை வாயிலில் அமர்ந்து காங்கிரஸ் கட்சியினர் முழக்கம் எழுப்பிய நிலையில், தீட்சிதர்களுக்கு ஆதரவாக பாஜகவினர் ஓம் நமச்சிவாய என பதில் முழக்கத்தை எழுப்பினர்.
இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கங்களை எழுப்பியதால் நடராஜர் கோயில் கனகசபை வாயில் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, கனகசபையின் பின்வாயில் வழியாக சென்று அறநிலையத்துறை மற்றும் காவல்துறையினர் வழிபாடு நடத்தினர். அப்போது தீட்சிதர் ஒருவர் கருவறையை அடைக்குமாறு கூறினார். அதிகாரிகள் தீட்சிதர் ஒருவரை தள்ளிவிட்டுச் சென்றதாக புகார் கூறிய மற்ற தீட்சிதர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கனகசபை மீது ஏறி வழிபட தடைவிதிக்கப்படுவதாக தீட்சிதர்கள் சார்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. இவ்விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், அப்பலகையை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனகசபையின் கதவுகளை திறக்க தீட்சிதர்கள் மறுத்துவிட்ட நிலையில், 4-வது நாளாக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனிடையே, நேற்று மாலை கனகசபை வாயிலில் அமர்ந்து காங்கிரஸ் கட்சியினர் முழக்கம் எழுப்பிய நிலையில், தீட்சிதர்களுக்கு ஆதரவாக பாஜகவினர் ஓம் நமச்சிவாய என பதில் முழக்கத்தை எழுப்பினர்.
பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து, கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபாடு நடத்த தீட்சிதர்கள் விதித்த கட்டுப்பாடு நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால், இன்று முதல் வழக்கம் போல பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
அதன் படி பக்தர்கள் வழக்கம் போல் கனக சபை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். எனினும், நடராஜர் கோயிலில் பரபரப்பான சூழல் நீடிப்பதால் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.