பீகாரில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து.. 4 பேர் பலி! பலர் காயம்.. மீட்பு பணி

post-img

பாட்னா: பீகாரில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்தில் வடகிழக்கு சூப்பர்ஃ பாஸ்ட் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியின் ஆனந்த் விஹாரில் இருந்து அசாம் மாநிலம் காமாக்யா செல்லும் ரயில் (ரயில் எண் 12506) தடம் புரண்டது. ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
மீட்புப் படையினருடன் பொதுமக்களும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடைபெற்ற இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்பு பணிகளில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. செல்போன் மற்றும் டார்ச் வெளிச்சத்தைப் பயன்படுத்தி மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து நடந்த இடத்திற்கு மருத்துவக் குழுவினர் விரைந்துள்ளனர்.


பீகார் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இதுவரை 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்புக் குழுவின் உதவியுடன், மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

Related Post