அண்ணாத்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். வரும் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தல் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்கள் கடந்த சில வாரங்களாக மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அனிருத் இசையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தற்போது 100 மில்லியனை தாண்டி சாதனை புரிந்துள்ளது.
சர்வதேச அளவில் ட்ரெண்டான காவாலா பாடல்: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். நீண்ட காலங்களுக்கு பிறகு ரஜினியின் ஜெயிலர் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தின் ப்ரமோஷன்களை கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே படக்குழுவினர் துவங்கினர். இந்நிலையில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தமன்னா மற்றும் ரஜினி நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் பாடலில் தமன்னாவின் ஆட்டம் சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பாடல் சில வாரங்களிலேயே 100 மிலலியன் வியூசை பெற்று சாதனை புரிந்துள்ளது. பல ரசிகர்கள், பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு அதிகமான அளவில் ரீல்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதனிடையே வெளிநாட்டு ரசிகர்களும் இந்தப் பாடலை கொண்டாடி வருகின்றனர். காவாலா பாடலுக்கு வெளிநாட்டினர் ஆடிய நடனம் இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ரஜினியின் படங்கள் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்று வரும் நிலையில், தமன்னா, ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள காவாலா பாடலுக்கு வெளிநாட்டு ரசிகைகள் மிகவும் சிறப்பாக தமன்னாவிற்கே டஃப் கொடுக்கும்வகையில் ஆட்டம் போட்டுள்ளனர்.
படத்தின் ஹுகும், ஜூஜுபி போன்ற பாடல்களும் லிரிக் வீடியோவாக வெளியான போதிலும் 100 மில்லியன் வியூசுடன் காவாலா பாடல் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. தமன்னாவும் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் இந்தப் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெயிலரில் தமன்னா இடம்பெறாத நிலையில், படத்தில் அவரது கேரக்டர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் என இந்திய மொழிகளில் சிறப்பான நடிகர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அதனால் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு சிறப்பாக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலங்களில் ரஜினியின் படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றுவரும் நிலையில் ஜெயிலர் படம் கண்டிப்பாக சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.