தவிடு பொடியாகும் பாஜக கனவு.. சத்தீஸ்கரில் கொடி நாட்டும் காங்கிரஸ்.. டைம்ஸ் நவ்?

post-img

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என்றும் பாஜகவுக்கு ஏமாற்றமே மிஞ்சும் எனவும் டைம்ஸ் நவ் - இடிஜி கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் கடந்த நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 74 சதவிகிதத்திற்கு மேலாக வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. சத்தீஸ்கரை பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கரில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், கடந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. இதனால், இந்த முறை இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க பாஜக பல்வேறு வியூகத்துடன் தேர்தலை எதிர்கொண்டது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை தக்க வைப்பத்தில் மும்முரம் காட்டியது. இதன் காரணமாக சத்தீஸ்கரில் ஆட்சியை பிடிக்க இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 71 இடங்களிலும் பாஜக 14 இடங்களில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் இதர இடங்களில் வென்றன. இந்த முறை ஆட்சியை பிடிப்பதற்காக இரு கட்சிகளும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துள்ளன. காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் தேசிய அளவிலான தலைவர்களும் சத்தீஸ்கரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வேலூரில் இருந்து டெல்லி பறந்த மேட்டர்.. மறுவாழ்வு தந்த மோடி.. சொன்னது யார் யாருங்க.. அப்ப கன்பார்ம்டு
பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள் பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சிக்காக அக்கட்சி தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
அதன்படி, டைம் நவ் இடிஜி வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியே அமையும் எனவும் பாஜகவுக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சும் என்றும் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. டைம்ஸ் நவ் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் படி, காங்கிரஸ் கட்சி 48 முதல் 56 இடங்களில் வெற்றி பெறும் என்றும் பாஜக 32 முதல் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கரில் மொத்த சட்டசபை தொகுதிகள்: 90
பெரும்பாண்மைக்கு - 46
காங்கிரஸ்: 48 முதல் 56 தொகுதிகளில் வெற்றி பெறும்.
பாஜக: 32 முதல் 40 தொகுதிகளில் வெற்றி பெறும்.
பிற கட்சிகள்: 2 முதல் 4 தொகுதிகள்.

 

Related Post