சென்னை: மதுரையில் உள்ள டைடல் பூங்காவிற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி Tidel Ltd விண்ணப்பித்துள்ளது. இதனால் விரைவில் டைடல் பார்க் பூங்கா அமைக்க சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது.
டைடல் பார்க் அமைக்கப்பட உள்ள நிலப்பரப்பு : 9.97 ஏக்கர் ஆகும். மொத்தமாக இந்த டைடல் பார்க் கட்டிடம் : G+12 தளங்கள் ஆகும். டைடல் பார்க் கட்டப்பட உள்ள பகுதி : 567,000 சதுர அடி (Ph-1) ஆகும். இதற்கான மொத்த செலவு : 289 கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் முதல் கட்டமாக வேலைவாய்ப்பு : 5,500 பேருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரான மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்ற கனவு நிஜமாக மாறும் சூழ்நிலை உள்ளது. மதுரையில் டைடல் பூங்கா அமைக்க தமிழக அரசு டெண்டர் விட உள்ளது.
2022ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 12 மாடிகள் கொண்ட தகவல் தொழில்நுட்ப அலுவலகம் கட்டும் திட்டம், மாட்டுத்தாவணியில் 5. ஏக்கர் நிலப்பரப்பில் வரும். மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் டைடல் பார்க் லிமிடெட் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மதுரையில் அமைய உள்ள ஐடி பார்க்கிற்கான மாதிரி வரைபடத்தை டாடா நிறுவனம் தமிழ்நாட்டின் டைடல் நிறுவனத்திடம் வழங்கி உள்ளதாம். இதையடுத்து விரைவில் ஐடி பார்க் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் திருச்சி & மதுரைக்கான டைடல் பார்க் பணிகள் விரைவில் தொடங்கும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தெரிவித்து இருந்தார். மதுரையில் 345 கோடி செலவில் 640,000 சதுர அடி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சியில் 350 கோடி செலவில் 630,000 சதுர அடி அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐடி பார்க்; மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இரு கட்டமாக டைடல் பார்க் வரவுள்ளது. முதற்கட்டமாக 600 கோடி 5 ஏக்கரில் டைடல் பார்க் தொடங்கப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக மேலும் 5 ஏக்கரில் டைடல் பார்க் உருவாக்கப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டைடல் மற்றும் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
மதுரையில் அமைக்கப்பட உள்ள ஐடி பார்க் மாதிரி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 2 மாதிரி படங்களில் ஒன்று இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று ட்வின் டவர் பாணியில் இரண்டு டவர்கள் கொண்ட தலா 25 மாடிகள் கொண்ட கட்டிட மாதிரி உருவாக்கப்பட்டு உள்ளது. இன்னொன்று வட்ட வடிவில் உருவாக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு கவனம்; தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளாக பெரிய ஐடி முதலீடுகள் வரவில்லை. அதை மீண்டும் கொண்டு வருவதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு களமிறங்கி உள்ளது.
1996-2001ல் எந்த அடித்தளம் போடப்பட்டதோ அதை வைத்தே தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை பிழைத்து வருகிறது. புதிய திட்டங்களின் மூலம், அடுத்த 3 ஆண்டுகளில் ஐடி துறையில் புதிய மாற்றங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
முக்கியமாக பெங்களூர், ஹைதராபாத் ஐடி துறையின் வேகத்தால் நாம் அடைந்த பின்னடைவை சரி செய்ய வேண்டும். முக்கியமாக பாரம்பரிய ஐடி தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி ஏஐ தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அதை மனதில் வைத்து சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் ஐடி பார்க் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ஐடி பார்க் முடிவு; அதன் அடிப்படையில், மதுரையில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மதுரையில் ஐடி பார்க் அமைப்பது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின், தொழில் என்று வந்துவிட்டால் பெரிய தொழில் மட்டும் முக்கியமில்லை. சிறிய தொழிலும் முக்கியம்தான். அப்போதுதான் பரந்துபட்ட வளர்ச்சி ஏற்படும். பாண்டியன் காலத்தில் தமிழ் வளர்த்த மதுரை, தற்போது தொழில் வளர்த்த மதுரையாக உள்ளது. பரந்துபட்ட வளர்ச்சிதான் முக்கியம். ஒரு மாவட்டம் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களும் முக்கியம்.
பாண்டியன் காலத்தில் தமிழ் வளர்த்த மதுரை, தற்போது தொழில் வளர்த்த மதுரையாக உள்ளது. பரந்துபட்ட வளர்ச்சிதான் முக்கியம். ஒரு மாவட்டம் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களும் முக்கியம். என்று கூறினார்.
மண் எடுக்கப்பட்டு உள்ளது; மதுரையில் அமைக்கப்பட உள்ள டைடல் பார்க்கிற்கு தற்போது மண் எடுக்கப்பட்டு உள்ளது. மண் எடுத்து பரிசோதனை செய்யும் பணிகள் நடக்கின்றன. அதை தொடர்ந்து டெண்டர் விடப்படும் என்றும் கூறப்படுகிறது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.