புஷ்பா 2: அல்லு அர்ஜுனால் கூட்டம்..உருக்குலைந்த நிலையில் தூக்கி செல்லப்பட்ட ரேவதி! வெளியான சிசிடிவி

post-img
ஹைதராபாத்: புஷ்பா-2 வெளியீட்டின் போது இளம் பெண் ஒருவர் நெரிசலில் சிக்கி பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், ஹைதராபாத்தில் புஸ்பா-2 படம் வெளியான போது அல்லு அர்ஜூனை காண சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் ரேவதி தூக்கிச் செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. புஷ்பா-1 படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா, பகத் பாசில், உள்ளிட்டோர் மீண்டும் இணைந்து இருந்த புஷ்பா 2 திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருக்கும் இந்த படம் ஆயிரம் கோடி வசூலைத் தாண்டி உள்ளது. இதை அடுத்து இந்திய அளவில் மிகப்பெரும் நடிகர்களின் ஒருவராக அல்லு அர்ஜுன் உயர்ந்திருக்கிறார். அதே நேரத்தில் படம் வெளியானதில் இருந்தே பல சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். குறிப்பாக கடந்த ஐந்தாம் தேதி படம் வெளியான போது ஹைதராபாத் சந்தியா தியேட்டரில் ரசிகர்களை சந்திக்க அல்லு அர்ஜுன் சென்றார். அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிர் இழந்தார். இதை அடுத்து அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பேன் எனக்கூறிய அல்லு அர்ஜுன் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு தருவதாக உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிக்கடபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அல்லு அர்ஜுன், அவரது பாதுகாவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட திரையரங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இனிமேல் வரும் காலங்களில் எந்த படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லன தெலுங்கானா அரசும் அறிவித்தது. இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனை நேற்று ஜூப்ளி ஹிள்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே அந்த சம்பவத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த நிலையில் சிறுவன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து தெலுங்கானா சட்டப்பேரவையில், அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த அல்லு அர்ஜுனும் பதிலளித்தார். இந்த விவகாரம் தற்போது தெலுங்கானாவில் அரசியல் பிரச்சினையாக உருமாறி இருக்கிறது. அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும், காங்கிரசுக்கு எதிராக அல்லு அர்ஜுனனின் ரசிகர்களும் கிளம்பி உள்ளனர. இந்த நிலையில் நெரிசலில் சிக்கிய பெண் ரேவதி தூக்கிச் செல்லப்பட்ட பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜுன் திரையரங்குக்கு சென்ற நான்காம் தேதி இரவு 9 மணிக்கு கடும் நெரிசல் ஏற்பட்ட நிலையில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டரை விட்டு வெளியேறினர். அப்போது இரும்பு கேட்டுகள் உடைக்கப்பட்டு பல பொருட்கள் சிதறிக்கிடந்தன. அப்போது நான்கு பேர் ரேவதியின் கை கால்களை பிடித்து மயக்கம் அடைந்த நிலையில் தூக்கி சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும் நுழைவாயில் அருகிலேயே சிலர் காயமடைந்த நிலையில் அமர்ந்திருக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளது.

Related Post