இந்தியாவின் டாப் 7 பணக்கார குடும்பங்கள்.. இவ்வளவு சொத்துக்களா..?

post-img

இந்திய நாட்டில் ஏறத்தாழ 302.4 மில்லியன் குடும்பங்கள் வாழ்கின்றன. இதில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் தான் செல்வத்தில் மிதக்கின்றன. அந்த குடும்பங்கள் தான் உயர்தட்டு மக்கள் வரிசையில் உள்ளனர். செல்வச் செழிப்பில் கொழிக்கின்றனர்.

ஆழமான வேர்களும் விதவிதமான பின்னணிகளும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நீண்ட நெடிய காலத்துக்கு உள்ளன. இத்தகைய திறன்கள் பரம்பரை பரம்பரையாக சொத்துக்களையும் பேரையும் புகழையும் அடுத்துவரும் சந்ததியினருக்கு கைமாற்றிக் கொண்டே செல்கின்றன.

இந்தப் பட்டியலில் சுதந்திரத்துக்கு முன்பே செல்வந்தர்களாக ஆனவர்களும், இந்த மாடர்ன் யுகத்தில் செல்வந்தர்களாக ஆனவர்களும் அடங்குவர். இந்தியப் பொருளாதாரத்தில் செல்வச் செழிப்பின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கும் டாப் 7 குடும்பங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

அம்பானி குடும்பம்: செல்வத்துக்கும் ஆடம்பரத்துக்கும் குறையே இல்லாத அம்பானி குடும்பத்தார் நடத்தும் விருந்துகள், வாழ்க்கை முறை மூலம் அடிக்கடி தலைப்புச் செய்திகளிலும் இடம்பெறுகிறது. அவர்களது ராஜ்ஜியத்தில் திருபாய் அம்பானி நிறுவிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒரு முக்கிய மைல்கல்லாகத் திகழ்கிறது. அந்தத் தொழிலை திருபாயின் மூன்றாவது சந்ததியினர் நிர்வகிக்கின்றனர்.

இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி இதில் அடங்குவர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு தலைமை வகிக்கும் முகேஷ் அம்பானி ஆசியாவின் டாப் 1 பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 87.2 பில்லியன்கள் என்று மே மாதம் 2023இல் கணக்கிடப்பட்டுள்ளது.

கோத்ரேஜ் குடும்பம்: பாரம்பரியமும் புதிய கண்ணோட்டங்களிலும் திளைத்திருக்கும் கோத்ரேஜ் குடும்பம்தான் நாட்டின் இரண்டாவது பெரிய பணக்காரக் குடும்பம். இதன் பாரம்பரியம் 124 ஆண்டுகளாகும். ஆர்தேஷிர் கோத்ரேஜ் இந்தச் செல்வப் பயணத்தை 1897 ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார். இன்றைக்கு அது ஆதி கோத்ரேஜ் வசம் சீரும் சிறப்புமாக உள்ளது.

ரியல் எஸ்டேட் போன்ற கன்ஸ்யூமர் புரொடக்ட்ஸ் மூலம் கோத்ரேஜ் குரூப் செழித்து வளர்ந்திருக்கிறது. நிசாபா கோத்ரேஜ் ஓவர்சீஸ் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புரொடக்ட்ஸ், பிரோஸ்ஜா கோத்ரேஜ் கோத்ரேஜ் ப்ராப்பர்டீஸை நடத்துகின்றன. குடும்பத்தின் நிகர மதிப்பு 13.9 பில்லியன் டாலர்களை கடந்த 2022 ஆம் ஆண்டில் தொட்டது.

பிர்லா குடும்பம்: 1857 ஆம் ஆண்டில் ஆதித்யா பிர்லா குழுமம் அடங்கியது பிர்லா தொழில் சாம்ராஜ்ஜியம். பருத்தித் தொழிலில் முதன் முதலில் சேத் ஷிவ் நாராயண் பிர்லா தொடங்கிவைத்தார். குமார மங்கலம் பிர்லா தலைமையில் இப்போது உலோகங்கள், சிமெண்ட், பைனான்ஸ், டெலிகாம், ரீடைல் துறைகளில் செயல்பட்டு வருகிறது.

இக்குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு 15.5 பில்லியன் டாலர்களாகும். மேலும் குமார மங்கலம் பிர்லாவின் மகள் அனன்யா பிர்லா தனது இசையின் மூலம் சர்வதேச மேடையை ஆக்கிரமித்துள்ளார்.

அதானி குடும்பம்: நம்பவே முடியாத வளர்ச்சியைப் பெற்ற கௌதம் அதானி குடும்பம் சாதாரண நிலையில் இருந்து பெரும் அதிபர்களாகியது. அதானியின் மகன்களான ஜீத், கரன் அதானி ஆகியோர் தங்கள் குழுமத்தின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைக்கின்றனர்.

கௌதம் அதானியின் மனைவியான பிரீத்தி அதானி அதானி அறக்கட்டளையை நிர்வாகம் செய்கிறார். அதானி குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு போர்ப்ஸ் தகவல்படி 2022இல் 150 பில்லியன் டாலர்கள் ஆகும்.

பஜாஜ் குடும்பம்: 1926ஆம் ஆண்டில் பஜாஜ் குரூப்பை ஜமன்லால் பஜாஜ் நிறுவினார். தற்போது குடும்பப் பாரம்பரியம் நீரஜ் ஆர் பஜாஜ்ஜின் பொறுப்பில் வளர்கிறது. பஜாஜ் ஆட்டோ உலகளவில் இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகன மார்க்கெட்டில் டாப்பில் உள்ளது. பஜாஜ் குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 14.8 பில்லியன் டாலர்களாகும்.

டாடா குடும்பம்: இந்தியாவின் தொழில்வளத்தைப் பெருக்கியதில் டாடா குடும்பத்துக்குப் பெரும் பங்கு உள்ளது. ஜாம்ஷெட்ஜி டாடா உருவாக்கிய அறக்கட்டளையானது ரத்தன் டாடாவின் முக்கியப் பங்குடன் மாடர்ன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. பல்வேறு துறைகளில் டாடா குடும்பத்தாரின் செல்வாக்கு கை ஓங்கியுள்ளது. ரத்தன் டாட்டாவின் நிகர சொத்து மதிப்பு ரூ.3800 கோடியாகும்.

மிஸ்திரி குடும்பம்: மிஸ்திரி குடும்பச் சொத்தான ஷாபூர்ஜி பால்லோன்ஜி குழுமம் கடந்த 1865ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஷாப்பூர் மிஸ்திரி கன்ஸ்ட்ரக்ஷன், ரியல் எஸ்டேட், ஜவுளி, ஷிப்பிங் போன்ற துறைகளில் தொழில் நடத்தி வருகிறார். அவரது இளைய மகன் சைரஸ் மிஸ்திரி டாடா குழுவின் தலைவராக 2012-16 வரை பொறுப்பு வகித்தார்.

பல்லோன்ஜி மிஸ்திரி மகன் ஷாப்பூர் மிஸ்திரியின் நிகர சொத்து மதிப்பு 32 பில்லியன் டாலர்களாகும். இந்த 7 பணக்காரக் குடும்பங்களும் இந்தியாவின் பொருளாதாரத்தின் ஆணிவேர்களாக உள்ளன.


Related Post