அரிசி குடும்ப அட்டைதாரர்களே.. உங்க ரேஷன் கார்டில் பெயர் நீக்கணுமா? கவலை வேணாம்..

post-img

சென்னை: ரேஷன் கார்டுகள் நம் ஒவ்வொருவருக்கும் தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது.. இந்த ரேஷன் கார்டுகளில், ஏதாவது பெயரை நீக்க வேண்டுமானால், அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே இதன்மூலம் பலன் அடைகிறார்கள் என்றால் அதற்கு காரணம் ரேஷன் அட்டைகள்தான்.
பயன்கள் என்னென்ன: அதேபோல, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகளும் அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன. வங்கி கணக்கு தொடங்கவும், சமையல் எரிவாயு, இணைப்பு பெறவும், வாக்காளர் அடையாள அட்டை, கிரெட் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணங்களை பெறவும், இந்த ரேஷன் கார்டு முகவரிதான் அடிப்படை சான்றாக விளங்கி வருகிறது.
இத்தகைய முக்கிய ஆவணமான ரேஷன் கார்டினை, மாநில அரசின் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து எளிதாக பெற்றுக் கொள்ளலாம். அதேபோல, உங்கள் ரேஷன் கார்டுகளில், குடும்ப நபரின் பெயர் சேர்க்க வேண்டும் என்றாலோ அல்லது பெயரை நீக்க வேண்டும் என்றாலோ அதற்கும் இணையதளம் மூலமே வழியை காணலாம்.
ஆவணங்கள் : இதற்கு Death Certificate (இறப்பு சான்றிதழ்), Marriage Certificate (திருமண சான்றிதழ், Adoption Certificate (தத்தெடுப்பு சான்றிதழ்), Others Certificate (இதர சான்றிதழ்) போன்ற ஆவணங்கள் கட்டாயம்தேவை.
- முதலில் தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpds.gov.in என்ற வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்.
- ஆங்கிலம், தமிழ் என 2 மொழிகளில், உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்ந்தெடுக்கலாம்.
- "மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, "குடும்ப உறுப்பினர் நீக்க" என்பதை கிளிக் செய்ய வேண்டும்
- இப்போது தோன்றும் புதிய பக்கத்தில், பழைய ரேஷன் கார்டுடன் இணைந்துள்ள உங்கள் செல்போன் நம்பரை பதிவிட வேண்டும்
- பின்னர் உங்களது செல்போனுக்கு ஒரு ஒடிபி (OTP) வரும்.. அந்த நம்பரை பதிவிட்டு, "பதிவு செய்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்களது ரேஷன் அட்டையின் விவரங்கள் தெரிய வரும்.
- இப்போது இடதுபுறத்தில் "அட்டை பிறழ்வு" என்பதையும், பிறகு, "புதிய கோரிக்கைகள்" என்பதையும் கிளிக் செய்ய வேண்டும்
- இப்போது ஸ்கிரீனில் உங்களது ரேஷன் கார்டு எண் மற்றும் ரேஷன் கடையின் குறியீட்டு எண் போன்றவற்றை சரி பார்த்து "சேவையை தேர்ந்தெடுக்கவும்" என்பதில், "குடும்ப உறுப்பினர் நீக்க" என்பதை கிளிக் செய்யவும்.
- பின்னர் ஸ்கிரீனில் தோன்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் நீக்க வேண்டிய பெயரை டிக் செய்து, நீக்கத்திற்கான காரணத்தை "காரணம்" என்ற கட்டத்தில் நிரப்பி, உரிய ஆவணங்களையும் அப்லோடு செய்ய வேண்டும்
- "பதிவு செய்ய" என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் போதும்.. உங்களது கோரிக்கை ஏற்கப்பட்டுவிடும்.. இதற்கு பிறகு, ஒன்றிரண்டு நாட்களில் உங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு நீங்கள் கோரியுள்ள பெயர், ரேஷன் கார்டிலிருந்து நீக்கம் செய்யப்படும்.
கட்டாயம் தேவை: உங்களது பெயர் நீக்கம் செய்யப்பட்டதுமே, "சான்றிதழ் பதிவிறக்கம்" என்ற வசதியை கிளிக் செய்து சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.. இந்த சான்றிதழை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும்போது, இது கட்டாயம் தேவைப்படும்.

 

Related Post