TN Rain | அடுத்த 2 நாட்கள்.. தமிழகத்தில் மீண்டும் கனமழை வாய்ப்பு.. வானிலை எச்சரிக்கை இதோ!

post-img
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்றும், இதனால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 2 நாட்களுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், 25ஆம் தேதி புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 25ஆம் தேதி வரை தமிழ்நாடு கடலோரப்பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, புத்தாண்டு தினத்தன்று, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யலாம் என தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். “நியூஸ் 18 தமிழ்நாடு” தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், இவ்வாறு கூறினார். சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், மழை இருக்குமா? என்கிற கேள்விக்கும் ஸ்ரீகாந்த் பதிலளித்தார். டிசம்பர் 24, 25 தேதிகளில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் கணித்துள்ளார்.

Related Post