சென்னை: களாக்காய் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன தெரியுமா? இது விநாயகர் சதுர்த்தி அன்று முழு முதற் கடவுளான விநாயகருக்கு படைக்கப்படும் பழமாகும்.
நாளை கிடைக்க போகும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் களாக்காய் எவ்வளவோ மேல் என்பது ஒரு பழமொழி. அதாவது இது வணிகரீதியாக வளர்த்தால் நல்ல வருமானம் என்பதைத்தான் அந்த பழமொழி விளக்குகிறது.
களாக்காய் புளிப்பு சுவை கொண்டது. இதன் பூ, காய், பழம், வேர் ஆகியவை மருத்துவ குணம் கொண்டவை. இது கண்நோய், கண்ணில் ஏற்படும் வெண்படலத்தையும், கரும்படலத்தையும் ரத்த படலத்தையும் நீக்கும் வல்லமை படைத்தது.
களாக்காய் வேரை 50 கிராம் எடுத்துக் கொண்டு அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அந்தத் தண்ணீர் 100 மில்லி ஆக சுண்டக் காய்ச்சிய பின்னர் எடுத்து வடிகட்டி காலை, மாலை இரு வேளையும் 50 மில்லியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பழம் நீரிழிவினால் ஏற்படும் புண்களை ஆற்றும் குணம் கொண்டது. இதனால் கருப்பையில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.
இதன் கொட்டைகளும் பழங்களும் பசியை தூண்டிவிடும். பற்களில், ஈறுகளில் ரத்தம் வழிவதை தடுக்கும். ரத்த சோகையை குணப்படுத்தும். இந்த காயில் விட்டமின் ஏ, சி, இரும்பு சத்து இருக்கிறது. பிரசவ காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வாந்தி, மயக்கத்தை தடுக்கும்.
பித்தத்தை குறைக்கும். ஆஸ்துமா நோயிலிருந்து காக்கும். சரும நோய்களை குணப்படுத்தும். இந்த காயில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் அடிவயிற்று வலியை சரி செய்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதில் விட்டமின் சி இருப்பதால் காய்ச்சலை குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இந்த களாக்காய் இயற்கையாகவே உடலில் உள்ள அழற்சியையும் அலர்ஜியையும் எதிர்த்து போராடும் திறன் கொண்டது. அரிப்புக்கு மருந்தாகிறது. இந்த களாக்காயை அதிக அளவு எடுத்துக் கொண்டால் ஆண்களின் விந்தணுக்கள், விறைப்புத் தன்மையில் பிரச்சினை ஏற்படும். அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது, அசிடிட்டி பிரச்சினை ஏற்படும். எனவே அளவோடு எடுத்துக் கொண்டு நல்ல பலன்களை அடையுங்கள்.