டெல்லி: கேரமல் செய்யப்பட்ட பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட உள்ளதாகவும், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மசாலா பாப் கார்னுக்கு 12 சதவீதமும், பாக்கெட் மற்றும் லேபிள் செய்யப்படாத பாப் கார்னுக்கு 5 சதவீதமும் வரி விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கேரளா காங்கிரஸ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்தள்ளது. அதனை பற்றி பார்ப்போம்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சில் அவ்வப்போது கூடி கூடி ஜி.எஸ்.டி. வரி விகிதம் குறித்து ஆய்வு செய்து, அதன் விகிதங்களை மாற்றியமைத்தும் வருகிறது. இந்த கவுன்சிலின் 55-வது கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நேற்று நடந்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கவுன்சிலின் உறுப்பினர்களான மாநில நிதியமைச்ர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிகளை கேரள மாநில காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. அப்படி என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என்பதை பார்ப்போம். இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையை வியாபாரமாக நடத்துவோருக்கே இது பொருந்தும். அதேநேரம் பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களை தனிநபர் வாங்கும்போதோ, விற்கும்போதோ ஜி.எஸ்.டி. கிடையாது.
பாப் கார்ன்களுக்கு பல்வேறு வகையில் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளத. முக்கியமாக கேரமல் செய்யப்பட்ட பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. அதேநேரம் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மசாலா பாப் கார்னுக்கு 12 சதவீதமும், பாக்கெட் மற்றும் லேபிள் செய்யப்படாத பாப் கார்னுக்கு 5 சதவீதமும் வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் பொது வினியோகத்துக்கு பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவீத வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் நாம்கீன் காருக்கு ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரியும், ஸ்வீட் பைக்கிற்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படுவதாகவும் கேரள காங்கிரஸ் விமர்சித்துள்ளது
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்களில் இருந்து காக்கும் ஜீன் தெரபி சிகிச்சைக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுவதாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.அதேநேரம் கருப்பு மிளகு மற்றும் உலர் திராட்சையை விற்பனை செய்யும் விவசாயிகள் ஜி.எஸ்.டி செலுத்த தேவையில்லை. மேலும் கடன் தொகை செலுத்தாததற்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விதிக்கும் அபராத கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. கிடையாது.
மருத்துவ காப்பீடு பிரிமியங்களுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜி.எஸ்.டி. குறைக்கப்படவில்லை.. அதேபோல் உணவு வினியோக நிறுவனங்களான ஸ்விக்கி, சுமட்டோ ஆகியவை மீதான வரி குறைப்பு தொடர்பாக முடிவு இப்போது எடுக்கப்படவில்லை..
இந்நிலையில கேரமல் செய்யப்பட்ட பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட உள்ளதாகவும், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மசாலா பாப் கார்னுக்கு 12 சதவீதமும், பாக்கெட் மற்றும் லேபிள் செய்யப்படாத பாப் கார்னுக்கு 5 சதவீதமும் வரி விதிக்கப்படுவது குறித்து கேரளா காங்கிரஸ், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்துள்ளது. அந்த பதிவில் சாதா பொங்கலுக்கு ஒரு ஜிஎஸ்டியும், சர்க்கரை பொங்கலுக்கு ஒரு ஜிஎஸ்டியும் என்று சொன்னால் என்ன லாஜிக் இருக்கும்.. அப்படித்தான் இந்த முடிவு இருக்கிறது என்று கேரள காங்கிரஸ் விமர்சித்துள்ளது.