Chandrayaan-ஐ கட்டியாளும் தமிழர்கள்-3 திட்டத்திற்கும் தமிழர்கள் தான் தலைவர்

post-img

உலக நாடுகள் அனைத்தும் நிலவு குறித்த ஆராய்ச்சி எப்போதும் கடினமானதாக பார்க்கப்படும் நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ISRO 3வது முறையாக Chandrayaan திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த சவால் மிகுந்த 3 சந்திராயன் திட்டங்களையும் செயல்படுத்திய தமிழர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

சந்திராயன் - 3 திட்டத்தின் மிஷன் டைரெக்டர் பி.வீரமுத்துவேல் - 46 வயதான வீரமுத்துவேல் தலைமையில் தான் இந்த மொத்த திட்டமும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய குடும்பத்தில் பிறந்த வீரமுத்துவேல் Ph.D பட்டம் பெற்றவர். சென்னையிலுள்ள புகழ்பெற்ற ஐஐடி கல்லூரியில் படித்தவர்.

சந்திராயன் - 2 திட்டத்தின் மிஷன் டைரெக்டர் எம்.வனிதா - இஸ்ரோவில் சுமார் 30 வருடங்களாக பணியாற்றி வருகிறார். திருச்சியில் பள்ளிப்படிப்பு, சென்னையில் GEC கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தவர். சந்திராயன் - 2 திட்டத்திற்கு அசோசியட் டைரக்டர் பதவியில் இருந்து மிஷன் டைரக்டராக பதவி உயர்வு பெற்றார். இதன் மூலம் இஸ்ரோவில் முதல் முறையாக ஒரு பெண் தலைமையில் ஒரு மிஷன் நடந்தது.

சந்திராயன் - 1 திட்டத்தின் மிஷன் டைரெக்டர் மயில்சாமி அண்ணாதுரை - Moon Man of India என அழைக்கப்படும் இவர் இஸ்ரோவின் சந்திராயன் - 1 திட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி-க்கு அருகே கொத்தவாடி பகுதியில் பிறந்து கோவை அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் இளங்கலை பட்டம், பிஎஸ்ஜி கல்லூரியில் முதுகலைபட்டம், கோவை அண்ணா பல்கலைகழக்தில் பிஹெச்டி பட்டம் பெற்றார்.

 

Related Post