பைக் விபத்திற்கு.. ஒரு நிமிடத்திற்கு முன்.. டிடிஎப் வாசன் அடாவடி.. பிளானே வேறயாமே!

post-img

சென்னை: டிடிஎப் வாசனுக்கு நேற்று விபத்து ஏற்பட்ட நிலையில் விபத்திற்கு முன் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
TTF வாசன் என்பவர் Twin Throttlers என்று யூ டியூப் பக்கத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2 வருடமாக இந்த டிராவல் விலாக் பக்கத்தை நடத்தி வருகிறார். இவருக்கு தற்போது 27.6 லட்சம் சப்ஸ்கிரைப்பர்கள் யூ டியூபில் இருக்கிறார்கள்.


இந்த நிலையில்தான் நேற்று இவருக்கு விபத்து ஏற்பட்டது. சென்னை - பெங்களூர் சாலையில் இவர் வீலிங் செய்த போது விபத்து ஏற்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் இவர் வீலிங் செய்து வீடியோ எடுத்துள்ளார். இரண்டு முறை சரியாக செய்தவர் மூன்றாவது முறை வீடியோ எடுத்த போது விபத்து ஏற்பட்டு உள்ளது. டிடிஎப் வாசனுக்கு நேற்று விபத்து ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.


அதன்படி இவருக்கு விபத்து ஏற்பட்டவுடன் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த அரசு மருத்துவமனையில் முதல் கட்டமாக சேர்த்துள்ளனர். அங்கே இவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கையில் மட்டும் முறிவு ஏற்பட்டுள்ளது.


விபத்துக்கு முன்: டிடிஎப் வாசனுக்கு நேற்று விபத்து ஏற்பட்ட நிலையில் விபத்திற்கு முன் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி விபத்து ஏற்பட்டது சர்வீஸ் ரோட்டில். மேலே உயர்மட்ட சாலை போட்டு முடிக்கப்படாததால் சர்வீஸ் ரோட்டில் டிடிஎப் வாசன் செல்ல நேரிட்டது. அவர் சர்வீஸ் ரோட்டிற்கு வரும் முன்பே மூன்று முறை முன்பாக வீலிங் செய்துள்ளார்.


அதே நெடுஞ்சாலையில் 3 முறை வீலிங் செய்துள்ளார். இதை எல்லாம் வீடியோவாக எடுத்து போடுவதே இவர்களின் பிளான். இதில் இரண்டாவது முறை ஏற்கனவே அவர் சறுக்கி விழ பார்த்துள்ளார். கடைசியாக நான்காவது முறை வீலிங் செய்த போதுதான் அவர் தவறி விழுந்துள்ளார். வீலிங்கை மக்கள் முன் செய்து வீடியோவாக போடும் திட்டத்தில் செய்தது விபத்தில் முடிந்துள்ளது.

 

யார் இவர்?: பைக்கில் பயணம் செய்வதை வீடியோவாக போடுவதுதான் இவரின் வழக்கம். சமீபத்தில் லடாக் சென்றதை இவர் வீடியோவாக போட்டு இருந்தார். பைக்கில் வேகமாக செல்வது, ஸ்டண்ட் செய்வது, ரேஸ் செய்வது ஆகியவற்றை இவர் வீடியோவாக போட்டு வருகிறார். அதே சமயம் இவர் வேகமாக செல்வது, சாலை விதிகளை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக இவர் மீது புகார் உள்ளது.


2கே கிட்ஸ் தொடங்கி பைக் மீது ஆர்வமாக இருக்கும் பலர் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். சமீபத்தில் இவர் சென்னைக்கு சில பொருட்கள் வாங்க வந்த போது அதை பற்றி முன்கூட்டியே வீடியோ போட்டு இருந்தார். இதையடுத்து அவரை பார்க்க ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர்.


அதேபோல் தனது பிறந்தநாளை முன்னிட்டு TTF வாசன் நேற்று ரசிகர்களை சந்தித்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இவர் ரசிகர்ளை சந்திக்க அழைப்பு விடுத்து இருந்தார். இதன் காரணமாக லட்சக்கணக்கில் நேற்று ரசிகர்கள் அவரை பார்க்க குவிந்தனர். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


சாலை விதிகளை மதிக்காமல் இவர் வேகமாக ஓட்டுவதாக இவர் மீது நிறைய புகார்கள் உள்ளன.டிடிஎப் வாசன் போன்றவர்கள் இளைஞர்களின் வாழ்க்கையை வீணடித்து வருகிறார்கள். சட்டத்திற்கு எதிராக செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் காவல்துறை கண்காணிப்பில் வருவார்கள். இவர்கள் எல்லாம் ஆட்டோமெட்டிக்காக காவல்துறை கண்காணிப்பில் வந்துவிடுவார்கள்.


இது போன்ற நபர்கள் தாங்கள் ஏதோ நல்லது செய்கிறோம். பெரிய ஆட்கள் என்று நினைக்கிறார்கள். இளைஞர்களுக்கு ரோல் மாடல் என்று நினைத்துக்கொண்டு டிடிஎப் வாசன் போன்றவர்கள் இளைஞர்களின் வாழ்க்கையை வீணடித்து வருகிறார்கள். காவல்துறை இதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம். நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். விரைவில் நடவடிக்கை எடுப்போம். வேகமாக செல்ல கூடாது என்று போலீசாரும் இவர் மீது நேரடியாக புகார்களை வைத்துள்ளனர்.

 

Related Post