ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 86% முஸ்லிம்கள் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக என்.டி.டி.வி. (NDTV) கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்புத் ஜாதியினர் 55% பேர் பாஜகவை ஆதரிப்பதாகவும் அக்கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 25-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ராஜஸ்தானில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி இருக்கிறது என்பது கருத்து கணிப்புகளின் முடிவுகள். ராஜஸ்தான் கள நிலவரம் தொடர்பாக என்.டி.டி.வி வெளியிட்ட கருத்து கணிப்பில் இடம் பெற்றவை:
ராஜஸ்தான் தேர்தல்.. யாருக்கு அதிக செல்வாக்கு.. பாஜகவா?.. காங்கிரசா? வெளியான புது சர்வே!
முதல்வர் அசோக் கெலாட் அரசின் செயல்பாடுகள் எப்படி?
முழுமையாக திருப்தி : 43%
ஓரளவு திருப்தி: 28%
அதிருப்தி: 10%
முழுமையாக அதிருப்தி : 14%
ராஜஸ்தான் அரசு ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் எப்படி செயல்பட்டது?
சிறப்பாக : 39%
நன்றாக : 35%
மோசம்: 15%
ரொம்பவே மோசம் : 5%
அசோக் கெலாட் அரசு நிர்வாகத்தில் அரசு பள்ளிகள் நிலைமை எப்படி ?
மேம்படுத்தப்பட்டிருக்கிறது: 60%
சீரழிந்துவிட்டது : 21%
அசோக் கெலாட் அரசு நிர்வாகத்தில் அரசு மருத்துவமனைகள் நிலைமை எப்படி ?
மேம்படுத்தப்பட்டுள்ளது: 58%
சீர்குலைவாகி போனது : 24%
பழங்குடிகள்- முஸ்லிம்கள் ஆதரவு யாருக்கு?
பழங்குடிகள்:
பாஜக : 48%
காங்கிரஸ் : 36%
முஸ்லிம்கள்:
பாஜக : 9%
காங்கிரஸ் : 86%
ஆண்கள்- பெண்கள்- இளைஞர்கள்- கிராமப்புறம்- நகர்ப்புறம் யாருக்கு ஆதரவு?
பெண்கள்
பாஜக: 45%
காங்கிரஸ்: 39%
ஆண்கள்
பாஜக: 43%
காங்கிரஸ்: 41%
இளைஞர்கள்
பாஜக: 45%
காங்கிரஸ்: 35%
கிராமப்புறங்கள்
பாஜக: 44%
காங்கிரஸ்: 38%
நகர்ப்புறங்கள்
பாஜக: 43%
காங்கிரஸ்: 45%
ஜாதிய அடிப்படையில் எந்த கட்சிக்கு எவ்வளவு ஆதரவு?
ராஜபுத்திரர்கள்
பாஜக: 55%
காங்கிரஸ்: 33%
தலித்துகள்
பாஜக: 46%
காங்கிரஸ் : 44%
ஜாட்
பாஜக : 34%
காங்கிரஸ்: 42%
இதர பிற்படுத்தப்பட்டோர்
பாஜக: 45%
காங்கிரஸ்: 35%
ராஜஸ்தானில் யார் முதல்வராக ஆதரவு?
அசோக் கெலாட் : 27%
வசுந்தர ராஜே சிந்தியா : 14%
சச்சின் பைலட்: 9%
கஜேந்திர சிங் செகாவத்: 6%
காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர்: 8%
பாஜக முதல்வர் வேட்பாளர்: 15%
இதர: 5%