மாஸ்கோ: உக்ரைன் போர் தொடர்பாக டொனால்ட் டிரம்புடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறனே் என்று ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இதனால் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புதின் இருவரும் ஒன்றாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனரா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையே இருந்த எல்லை பிரச்சனை போராக மாறி உள்ளது. 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தால் போர் 3வது ஆண்டை நிறைவு செய்யும்.
தற்போது க்ரைனுக்குள் நுழைந்து ரஷ்யா படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரைனும், ரஷ்யா படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. ரஷ்யா மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதலையும் தொடர்ந்து வருகிறது.
இந்த போரை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் போர் நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதேபோல் டொனால்ட் டிரம்ப் நிச்சயம் போர் நிறுத்தம் செய்வார் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் போர் நிறுத்தம் தொடர்பாக டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்புடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைக்கு தயார் என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில் தற்போது மீண்டும் அதனை அவர் உறுதி செய்துள்ளார். அதாவது ரஷ்யாவில் நேற்று ஆண்டு இறுதி மாநாடு நடந்தது. இதில் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:
‛‛உக்ரைன் போரில் ரஷ்யா படைகளின் நிலை வலுவாக உள்ளது. ரஷ்யா சார்பில் வடகிழக்கு உக்ரைனில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 3 பேர் இறந்துள்ளனர். அதேவேளையில் உக்ரைன் அதிபர் புருசெல்லில் வைத்து ஐக்கிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார். aஜ்யாவின் குர்ஷ்க் பிராந்தியத்தை உக்ரைன் கைப்பற்றி உள்ள நிலையில் அது விரைவில் மீட்கப்படும்’’ என்றார்.
இந்த வேளையில் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளாரே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டொனால்ட் டிரம்ப், ‛‛தற்போதைய சூழலில் ரஷ்யா - உக்ரைன் மீதான முழு தாக்குதலை தொடங்கவில்லை. டொனால்ட் டிரம்புடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளேன்.
இருப்பினும் எப்போது அவரை சந்திப்பேன் என்பது தெரியவில்லை. இதுபற்றி நான் எதுவும் சொல்லவில்லை. நான் அவரிடம் பேசி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இருப்பினும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன். போர் நிறுத்தம் தொடர்பான சமசரங்களுக்கு தயாராக இருக்கிறேன். உண்மையில் நானும் டொனால்ட் டிரம்ப்பும் சந்தித்தால் அங்கு பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும்.