அம்பானி வீட்டில் குவா குவா சத்தம்..ஆகாஷ் அம்பானி-க்கு குட்டி தேவதை பொறந்தாச்சு

post-img

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ-வின் தலைவரும், ஆசியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி-யின் மூத்த மகனுமான ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா ஆகியோருக்கு புதன்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது.

இவர்களுக்கு பிருத்வி என்ற மகன் இருக்கும் வேளையில் 2வதாக குட்டி தேவதை ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா ஜோடிக்கு பிறந்துள்ளது. சமீபத்தில் தான் முகேஷ் அம்பானியின் ஆசை மகளான ஈஷா அம்பானி ஆனந்த பிராமல் ஜோடிக்கு இரட்டை குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து அடுத்த சில மாதத்திலேயே அம்பானி வீட்டில் குவா குவா சத்தம்.

அம்பானி வீட்டில் குவா குவா சத்தம்.. ஆகாஷ் அம்பானி-க்கு குட்டி தேவதை பொறந்தாச்சு..!

ஏப்ரல் மாதம் இந்தியாவை மட்டும் அல்லாமல் சர்வதேச செலிப்ரிட்டி உலகை திரும்பி பார்க்க வைத்த நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் (என்எம்ஏசிசி) திறப்பு விழாவில் இந்திய நட்சத்திரங்கள் மட்டும் அல்லாமல் உலக நாடுகளின் செலிப்ரிட்டிகளும் கலந்துக்கொண்டனர். இந்த விழாவின் போது தான் ஸ்லோகா மேத்தா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.

மே 24 ஆம் தேதி முகேஷ் அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஸ்லோகா மேத்தா மற்றும் பேரன் பிருத்வியுடன் மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோவிலில் பிரார்த்தனை செய்தனர். பிரசவத்திற்கு முன்பு ஸ்லோகா மேத்தா கோவிலுக்கு சென்றுள்ளார். ஆகாஷ் அம்பானி, ஸ்லோகா மேத்தா ஜோடி மார்ச் 2019 இல் இந்தியாவே வியக்கும் வண்ணம் ஆடம்பரமாக திருமணம் செய்துக்கொண்டனர்.
                         அம்பானி வீட்டில் குவா குவா சத்தம்.. ஆகாஷ் அம்பானி-க்கு குட்டி தேவதை பொறந்தாச்சு..!

இதன் மூலம் முகேஷ் அம்பானி - நீதா அம்பானிக்கு 4 பேர பிள்ளைகள் உள்ளனர், முகேஷ் அம்பானியின் 88 பில்லியன் டாலர் சொத்து மதிப்பும், 16.74 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிர்கால வாரிசு இவர்கள் தான். ஆகாஷ் அம்பானி, ஸ்லோகா மேத்தா பெண் குழந்தையின் பெயரை இன்னும் வெளியிடவில்லை.

மேலும் குழந்தையை பார்க்க ஆகாஷ் அம்பானி-யின் சகோதரரான அனந்த் அம்பானியும் அவருடைய வருங்கால மனைவியுமான ராதிகா மெர்சன்ட் ஆகியோர் பல கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரில் இரவு மருத்துவமனைக்கு வந்தனர்.

ஆகாஷ் அம்பானி மற்றும் ஸ்லோகா மேத்தா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்த விஷயத்தை ரிலையன்ஸ் நியூ எனர்ஜி லிமிடெட் தலைவர் தனராஜ் நாத்வானி டிவிட்டரில் தெரிவித்தார்.

Related Post