சென்னை: சினிமா பிரபலங்கள் பலர் சமீபத்தில் விவாகரத்து குறித்த அறிவித்து வருகின்றனர். இப்படி அறிவித்த தனுஷ், ஏ. ஆர். ரஹ்மான் வரிசையில் தற்போது பிரபல இயக்குநர் சீனு ராமசாமியும் இணைந்திருக்கிறார். தனது 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தனது x தளத்தில், "அன்பானவர்களுக்கு வணக்கம் நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார்.
இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம். அன்புடன் சீனு ராமசாமி" என பதிவிட்டுள்ளார்.