தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இன்று பாதயாத்திரை சென்றார். அண்ணாமலை தனது பாத யாத்திரைக்கு இடையே திறந்த வேனில் நின்ற படி பேசினார். அப்போது அவர் திமுக அரசால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என கடுமையாக விமர்சனம் செய்தார். அண்ணாமலை கூறியதாவது:-
பிரதமர் மோடி ஏழைகளுக்காக ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார். 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வந்த மத்திய அரசின் நிதி மட்டும் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். எந்தவித ஊழலும் இன்றி இந்த நிதி வந்து கொண்டு இருக்கிறது. விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி என்றால் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு செல்கிறது. யாரிடமும் போய் கையெழுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் இருக்கக் கூடாது என பிரதமர் நினைக்கிறார்.
பிரதமர் மோடி ஏழைகளுக்காக ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார். 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வந்த மத்திய அரசின் நிதி மட்டும் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். எந்தவித ஊழலும் இன்றி இந்த நிதி வந்து கொண்டு இருக்கிறது. விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி என்றால் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு செல்கிறது. யாரிடமும் போய் கையெழுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் இருக்கக் கூடாது என பிரதமர் நினைக்கிறார்.
ஆலங்குடியில் மா, பலா, வாழை என முக்கனிகளும் விளையக்கூடிய மண். இப்படிப்பட்ட இந்த ஊரில் தண்ணீர் பிரச்சினை உள்ளது. காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை சரிப்படுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமலே மாநில அரசு வண்டியை ஓட்டிக்கொண்டுள்ளது. காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தால் நம்மால் நிரந்தரமான தீா்வு கொண்டுவர முடியும்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகி விட்டது. மத்திய அரசில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளாகி விட்டது. இந்த 2 ஆட்சிகளின் பட்டியலை மக்கள் தராசு வைத்து பார்க்கின்றனர். அமைச்சர்கள் 'நீட்' தேர்வு வேண்டாம் என்று கூறுகின்றனர். ஆனால் நீட் தேர்வில் ஒரு புறம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து கொண்டிருக்கின்றனர். கீரமங்கலத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 3 ஆண்டுகளில் 12 பேரும், இந்த ஆண்டு 3 பேரும் அரசு மருத்துவமனையில் மருத்துவம் படிக்க சென்றுள்ளனர்.
இந்த தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ மெய்யநாதன், இதற்கு முன்பாக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். ஆனால், கோபாலபுரத்து பட்டத்து இளவரசருக்கு விளையாட்டுத்துறை வேண்டும் என்பதால், அதை விட்டுவிட்டு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சராக இருக்கிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் இந்தியாவில் 29 மாநிலங்களில் தமிழகம் 21-வது இடத்தில் உள்ளது.
ஆறுகளில் தண்ணீர் எடுத்து குடிக்க கூடிய வகையில் உள்ள மாநிலங்களில் கடைசியில் இருந்து 3-வது இடத்தில் தமிழகம் உள்ளது. ஆறுகளில் தண்ணீர் எடுத்து குடிக்க முடியாத வகையில் மாசுபடிந்துள்ளது. புதுக்கோட்டையின் இன்னொரு அமைச்சர் ரகுபதி... அவருக்கு என்ன துறை கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று பாருங்கள்.. சிறைத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை.. இவர் மேலேயே ஒரு வழக்கு உள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக வழக்கு உள்ளது. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டவர். அவர் லஞ்ச ஒழிப்புத்துறை அமைச்சராக உள்ளார். ஜெயிலில் இருக்க வேண்டிய அமைச்சர் சிறைச்சாலைத்துறை அமைச்சராக உள்ளார்.
எல்லா வளங்கள் இருந்தும் ஊழல் ஆட்சியால் தமிழகம் பின்னோக்கி செல்கிறது. வருகிற முதலீடுகளையும் திமுக அரசு தவறவிடுகிறது. பாக்ஸ்கான் நிறுவன முதலீடு என்ன ஆனது என்பதற்கு விளக்கம் அளிக்கவில்லை. திமுக அரசால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.