டெல்லி: அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்தினர். ராஜ்யசபாவில் நேற்று பேசிய அமித்ஷா, பேஷனுக்காக அம்பேத்கர்.. அம்பேத்கர் என பேசுவதாக கிண்டல் செய்திருந்தார். அமித்ஷாவின் இந்தப் பேச்சைக் கண்டித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் படங்களுடன் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக டிஆர் பாலு உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்றனர்.