மதுரையில் சின்ன வெங்காயத்தின் விலை குறைந்து ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை நெல் பேட்டை சந்தையில் தக்காளி, இஞ்சி மட்டுமின்றி நாட்டு காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி, கடந்த வாரம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி, இன்று 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திராவில் இருந்து மட்டுமே வரத்து இருப்பதால், தக்காளி விலை அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் சின்ன வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் 180 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சின்ன வெங்காயம், இன்று 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் ஒரு கிலோ பீன்ஸ் மற்றும் பச்சை மிளகாய் 120 ரூபாய்க்கும், இஞ்சி 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக பொதுமக்களும், வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகளும் வேதனை தெரிவித்தனர்