இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு சீனா பல உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தில் கடற்படை தளம் அமைக்க விருப்பம் தெரிவித்த சீனாவுக்கு, பாகிஸ்தான் போட்ட ஒரு கண்டிஷன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இந்த கண்டிஷனால் பாகிஸ்தான் மீது கடும் கோபமடைந்த சீனா அலறியுள்ள நிலையில் இருநாடுகள் தொடர்பான இந்த விவகாரத்தை உலக நாடுகள் உற்று கவனிக்க தொடங்கி உள்ளன.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் சீனாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. இதற்கு முன்பு அமெரிக்காவுடன் ஓரளவு நல்ல உறவை பாகிஸ்தான் வைத்திருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் உறவில் விரிசல் விழ தொடங்கியது. இதையடுத்து சீனாவுடன், பாகிஸ்தான் நட்பாக உள்ளது.
தற்போது பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இருப்பினும் சீனா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உதவி செய்து வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு துறையில் உள்ள முப்படைகளையும் பாகிஸ்தான் பலப்படுத்துவதற்கு சீனா பக்கப்பலமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மகாணத்தில் அரபிக்கடலில் உள்ள குவாதர் துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் நீண்ட காலமாக நினைத்தது. ஆனால் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால் அது சாத்தியமாகவில்லை. இதையடுத்து ஒருவழியாக அங்கு துறைமுகம் கடந்த 2007 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது துறைமுகத்தை மேம்படுத்த சீனா உதவி வருகிறது. அதோடு துறைமுகத்தின் நிர்வாக கட்டுப்பாடு பாகிஸ்தானிடம் உள்ள நிலையில் ஆபரேஷன் தொடர்பான கட்டுப்பாடு சீனாவிடம் இருக்கிறது.
மேலும் இந்த துறைமுகத்தை மையப்படுத்தி சீனா -பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் என்பது அமைக்கப்பட்டது. இதற்காக சீனா 60 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது. தற்போது இந்த துறைமுகத்தில் கடற்படை தளத்தை அமைக்க சீனா விரும்புகிறது. இதற்கு முதலில் அனுமதி வழங்குவதாக பாகிஸ்தான் தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது குவாதர் துறைமுகத்தில் கடற்படை தளம் அமைக்க பாகிஸ்தான் கண்டிஷன் போடுகிறது. கண்டிஷன் என்றால் அது சாதாரணமானது இல்லை. சீனாவை சிக்கலில் மாட்டிவிடும் மாதிரியான கண்டிஷனாக உள்ளது.
அதாவது குவாதர் துறைமுகத்தில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் என்றால் சீனா தங்கள் நாட்டுக்கு அணுஆயுத உதவிகளை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. அதாவது சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனா அரசின் சீனியர் அதிகாரிகள் மற்றும் ராணுவத்துறை அதிகாரிகள் இடையே உயர்மட்ட குழு மீட்டிங் ஒன்று நடந்தது. இதில் குவாதர் துறைமுகத்தில் சீனா சார்பில் கடற்படை தளம் அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது பாகிஸ்தான் சார்பில், ‛‛குவாதர் துறைமுகத்தில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் என்றால் சீனா Second Strike Nuclear Capability உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளது.
Second Strike Nuclear Capability என்பதன் அர்த்தம் என்னவென்றால் பாகிஸ்தான் மீது ஏதாவது ஒரு நாடு அணுஆயுத தாக்குதலை நடத்தும்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உடனே சீனா தாக்குதல் நடத்திய நாடு மீது அணுஆயுத தாக்குதலை நடத்த வேண்டும் என்பதாகும். பாகிஸ்தானின் இந்த டிமாண்ட்டை சீனா சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் பாகிஸ்தான் சுற்றி சுற்றி சண்டையை இழுத்து வைத்துள்ளது. உதாரணமாக பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் தொடர்ந்து மோதலை கடைப்பிடித்து வருகிறது. இதுதுவிர பாகிஸ்தான் பல்வேறு நாட்டு தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் பாகிஸ்தானுடன் இணக்கமாக இல்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானுக்கு பிரச்சனை வரலாம்.
இதனால் தான் பாகிஸ்தானும் எப்போதும் அச்ச உணர்வுடன் இருக்கிறது. இப்படியான சூழலில் தங்கள் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க சீனா அணு ஆயுத தாக்குதலை நடத்தி உதவ வேண்டும் என்பதை பாகிஸ்தான் வெளிக்காட்டி உள்ளது. இதனால் சீனா அதிர்ந்து போய் உள்ளது. ஏனென்றால் அணுஆயுதத்தை தாக்குதல் என்பது மோசமான விளைவை ஏற்படுத்தும். சொந்த நாட்டு மீது எதிரி தாக்கும்போதே அணுஆயுதத்தை பயன்படுத்தாமல் தான் பல நாடுகள் உள்ளன. இப்படியான சூழலில் பாகிஸ்தானுக்காக, சீனா அணுஆயுதத்ததை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையால் அதிர்ந்து போய் உள்ளது சீனா.
சீனாவை பொறுத்தவரை தற்போது அணுஆயுதம் கொண்ட நாடுகள் பட்டியலில் உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தானும் உள்ளது. இருப்பினும் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு அணுஆயுதங்களை வழங்க முடியாது. அப்படி வழங்கினால் உலக நாடுகள் மொத்தமாக பொருளாதார தடைகளை விதிக்கலாம். இதனால் பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை தொடக்க நிலையிலேயே புறம்தள்ளி உள்ளது சீனா. இதையடுத்து இந்த பேச்சுவார்த்தையில் குவாதர் துறைமுகம் தொடர்பாக முடிவு எட்டப்படாமல் முடிவுக்கு வந்துள்ளது.
அதோடு தங்களின் கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டால் ஓகே.. இல்லாவிட்டால் குவாதர் துறைமுகத்தில் சீனா கடற்படை தளம் அமைக்காமல் வெளியேறட்டும் என்பது தான் பாகிஸ்தானின் நிலைப்பாடாக உள்ளது. இதனை முன்வைத்து தான் பாகிஸ்தான் இந்த கண்டிஷனை போட்டுள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் குவாதர் துறைமுகத்தில் கடற்படை தளம் அமைக்கும் விஷயத்தில் பாகிஸ்தான் - சீனா இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிராப் சைட் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‛‛பாகிஸ்தான் - சீனா உறவில் வெளிப்படையாக விரிசல் என்பது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்குள் சீனா கடற்படை தளம் அமைக்கும் விஷயத்தில் இந்த விரிசல் தெளிவாக தெரியவருகிறது. இந்த டிராப் சைட் நிறுவனம் தான் இதற்கு முன்பு முதல் முறையாக குவாதர் துறைமுகத்தில் சீனா கடற்படை தளத்தை அமைக்க முயற்சி செய்கிறது என்ற செய்தியை வெளியிட்டு இருந்தது. தற்போது அந்த செய்தி நிறுவனமே சீனா-பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.