வாய்ப்பு தராமல் அலையவிட்ட கம்பீர் - ரோஹித்.. சீரியஸுக்கு இடையே ஓய்வு பெற்ற அஸ்வின்! என்ன நடந்தது?

post-img
சென்னை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார். ஒரு தொடருக்கு இடையே அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இன்று மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தவுடன், செய்தியாளர்களிடம் பேசுவதற்கு கேப்டன் ரோஹித் சர்மாவுடன் வந்தபோது, 38 வயதான அஸ்வின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். டெஸ்ட் போட்டிகளில் நாட்டின் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்ற அஸ்வின் டெஸ்ட் உள்ளிட்ட அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.. 38 வயதான அஸ்வின், பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை இந்தியா டிரா செய்த சிறிது நேரத்திலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவுக்காக 13 ஆண்டுகாலமாக கிரிக்கெட் ஆடிய நிலையில் அவர் ஓய்வை அறிவித்துள்ளார். 537 விக்கெட்டுகளுடன் இந்தியாவின் டாப் ஸ்பின் பவுலர்களில் ஒருவராக அஸ்வின் உள்ளார். அனில் கும்ப்ளேவின் 619 ரன்களுக்கு அடுத்தபடியாக அஸ்வின் உள்ளார். கடந்த சில வருடங்களாக நல்ல பார்மில் இருந்து தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வந்த அஸ்வினின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. மார்ச் 2022 இல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் பந்து வீச்சாளர் அஷ்வின் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டில் (போட்டிகளின் அடிப்படையில்) 250, 300 மற்றும் 350 விக்கெட்டுகளை வேகமாக எட்டியவர் அஸ்வின். 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450 மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை (போட்டிகளின் அடிப்படையில்) எட்டிய அதிவேக இந்தியர். ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மற்றும் ஐந்து விக்கெட்டுகளை நான்கு முறை எடுத்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். 50 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர். டெஸ்ட்களில் அதிக நாயகன் விருதுகள் (11) பெற்றவர் அஸ்வின் என்பதும் குறிப்பிடத்தக்கது. என்ன நடந்தது?: ஒரு தொடருக்கு இடையே அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அஸ்வின் இந்த தொடரில் ஆட கடந்த சில நாட்களாக முயன்றுள்ளார். ஆனால் 3 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவே இல்லை. இந்திய அணியின் பவுலிங்கில் பும்ரா மட்டுமே சிறப்பாக ஆடினார். ஸ்பின் பவுலிங் சரியாக இல்லை. ஆனால் அப்போதும் கூட அஸ்வினுக்கு வாய்ப்பு இல்லை. ஆல் ரவுண்டராக அஸ்வின் நன்றாக பேட்டிங்கும் செய்வார். ஆஸ்திரேலியாவில் நல்ல அனுபவமும் உள்ளது. ஆனாலும் கூட அஸ்வினை அணியில் எடுக்கவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த அஸ்வின்தான்.. தொடரில் இருந்து வெளியேறி உள்ளார் என்கிறார்கள். வாய்ப்பிற்காக அலைய வேண்டியது இல்லை.. நான் தேவையில்லை என்றால் இங்கே இல்லாமல் இருப்பதே சரியாக இருக்கும் என்று அஸ்வின் நினைத்ததே அவரின் இந்த முடிவிற்கு காரணம் என்கிறார்கள். பொதுவாக ஒரு தொடருக்கு இடையே யாரும் ஓய்வு பெற மாட்டார்கள். பிரச்சனை இருந்தால் மட்டுமே ஓய்வு பெறுவார்கள்.. இப்போது அஸ்வினுக்கு இதே நடந்துள்ளதால் அவருக்கு ஏதேனும் மனஸ்தாபம் காரணமாக அவர் ஓய்வு பெற்றுள்ளாரோ என்று எண்ண தோன்றுகிறது.

Related Post