சாப்ட்பேங்க் முதலீட்டில் இயங்கும் Juspay நிறுவனம் Namma Yatri என்ற ஆன்லைன் டாக்ஸி சேவை தளத்தை மத்திய அரசு உருவாக்கிய Open Network for Digital Commerce (ONDC) தளத்தில் இணைத்து மக்களுக்கு அளித்து வரும் வேளையில் கடந்த 8 மாதத்தில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தை பெற்றுள்ளது.
ONDC தளத்தில் இணைக்கப்பட்ட Namma Yatri தளம் கடந்த 8 மாதமாக இயங்கி வருகிறது. இந்த 8 மாதத்தில் ஒவ்வொரு மாதமும் 100 சதவீத வளர்ச்சி உடன், தற்போது ஓலா, உபர் பெற்று வரும் தனசரி சராசரி ஆட்டோ புக்கிங் எண்ணிக்கையில் சுமார் 20 சதவீதத்தை Namma Yatri பெற்று வருகிறது.
இந்தியாவில் ஆன்லைன் டாக்சி சேவை வர்த்தகத்தில் பல வருடமாக இயங்கி வரும் ஓலா, உபர் நிறுவனத்தின் ஆட்டோ பிரிவில் தினமும் 140000 மற்றும் 150000 புக்கிங்-ஐ பெறு வேளையில்.. வெறும் 8 மாதத்தில் 20 சதவீத வர்த்தகத்தை பெற்று அசத்தியுள்ளது Namma Yatri. Namma Yatri தளம் ONDC-யில் இணைக்கப்பட்டு இயங்கி வருவதால் கமிஷன், சர்ஜ் சார்ஜ் போன்ற எந்த விஷயமும் இல்லை. தற்போது பெங்களூர், கொச்சி மற்றும் இதர சில நகரங்களில் இயங்கி வரும் வேளையில் விரைவில் 6 முக்கிய நகரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பேடிஎம் போன்ற பல நிறுவனங்கள் தற்போது ONDC தளத்தில் இருக்கும் வேளையில் பேடிஎம் - Namma Yatri சேவையை வழங்க திட்டமிட்டு வருகிறது. Namma Yatri வளர்ச்சி குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ கூறுகையில் இந்த வருடத்தின் 3வது காலாண்டுக்குள் தினமும் 1 லட்சம் ஆட்டோ புக்கிங் சேவையை பெறும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.