விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி நேற்றோடு முடிவுக்கு வந்தது.இதில் டைட்டில் வின்னராக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பரிசு தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
குக் வித் கோமாளியில் இத்தனை வாரங்களாக கஷ்டப்பட்டு போராடி கிடைத்த பணத்தை மைம் கோபி என்ன செய்தார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அதைக் குறித்து விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அதிகமான ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி வருகிறது. இந்த நிகழ்ச்சியை பார்த்தால் பலருக்கும் மன அழுத்தம் போய்விடும் என்று கூறி வருகிறார்கள். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியில் கலகலப்பாகவும் ஜாலியாகவும் இருக்கிறது.
சாதாரண சமையல் நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் அசத்தலான காமெடிகளும் அதற்கு டைமிங்கில் பதிலடி கொடுக்கும் நடுவர்களும் இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு ஒவ்வொரு சீசனும் அதிகமான வரவேற்பு பெறுவதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இப்போது நான்காவது சீசன் முடிவடைந்து இருக்கிறது.
நேற்று நான்காவது சீசனின் இறுதி நாள் நிகழ்ச்சியில் பல நெருடலான சம்பவங்களும் நடந்தது. குக் வித் கோமாளியின் இறுதி நாள் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இருந்தனர். அந்த நிலையில் இந்த நிகழ்ச்சி 5 மணி நேரமாக ஒளிபரப்பாகி வந்தது. இறுதியில் அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த டைட்டில் வின்னர் யார் என்று அறிவிக்கப்பட்ட போது ரசிகர்கள் உண்மையிலேயே அதிகமாக மகிழ்ச்சி அடைந்ததாக கருத்துக்கள் குவிகிறது.
காரணம் ஆரம்பத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக சிவாங்கி தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். காரணம் அவர் விஜய் டிவியை சார்ந்தவர் என்பதாலும் அவரைத்தான் வெற்றி பெற வைப்பார்கள் என்று கூறியிருந்த நிலையில் கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் மைம் கோபி வெற்றியாளர் என்று கூறியதும் முதல் ஆளாக துள்ளி குதித்து ஆர்ப்பாட்டம் செய்ததும் அதே சிவாங்கி தான்.
அனைவரும் தொடர்ச்சியாக மைம் கோபிக்கு வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில் கோபி சற்றும் எதிர்பார்க்காமல் தான் ஜெயித்த பணம் 5 லட்சம் ரூபாயை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப் போவதாக கூறி இருக்கிறார். இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் முதல் முறையாக இந்த சீசனில் தான் ஆண் போட்டியாளர் வெற்றி பெற்றிருக்கிறார். அவரும் தான் வெற்றி பெற்ற பணத்தை தனக்கு என்று உரிமை கொண்டாடாமல் முடியாதவர்களுக்கு கொடுத்தது பலருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
அதனாலேயே அதிகமான ரசிகர்கள் மைம் கோபியின் இந்த செயலை பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் தன்னுடைய குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைக்காத மைம் கோபி புண்ணியத்தை சேர்த்து வைத்து விட்டார் என்று அவருக்கு வாழ்த்துக்களும் குவிக்கிறது. திறமை இருந்தும் மைம் கோபிக்கு சரியான திரைப்பட வாய்ப்புகள் அமையாமல் இருக்கும் நிலையில் இனி அவருடைய திறமைக்கு தகுந்த திரைப்பட வாய்ப்புகள் அமைய வேண்டும் என்றும் அதிகமானோர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.