சென்னை: திமுக எம்பி தயாநிதி மாறன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. இதுகுறித்து தென்னக ரயில்வேக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்.
தன்னுடைய தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருபவர் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான தயாநிதி மாறன்.. திமுக நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வருவதுடன், மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தும், தாக்கி பேசியும் வருபவர்..
தயாநிதி மாறன்: சில சமயம் தயாநிதி மாறன் அவையில் பேசும் பேச்சு, டெல்லியையே திரும்பி பார்க்க வைத்துவிடும். சமீபத்தில்கூட சென்னையில், "நீட் விலக்கு நம் இலக்கு" என்ற பெயரில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு இவர் பேசியிருந்தது, சோஷியல் மீடியாவில் வைரலானது..
"என்னுடைய சொந்த மகளுக்கே, மருத்துவ படிப்புக்கு என்னால சீட் வாங்கித் தர முடியலை. நீட் தேர்வு எழுதினார்.. ஆனாலும், என் மகளால் தேர்வு பெற முடியவில்லை. ஏனெனில் ஸ்டேட் போர்டில் படித்துவிட்டு சிபிஎஸ்இ போர்டில், தேர்வில் எப்படி தேர்ச்சி பெற முடியும்? இந்த நிலைமை மாற வேண்டும். நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும். கண்டிப்பாக இந்த போராட்டம் ஒரே நாளில் முடியாது. இது ஒரு தொடர் போராட்டம்" என்று ஆவேசமாக பேசியிருந்தார் தயாநிதி மாறன்.
எஸ்கிலேட்டர்: இந்நிலையில், எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றினை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தயாநிதி மாறன்.. அந்த வீடியோவில், வயதான பெண்மணி ஒருவர், எஸ்கிலேட்டர் பழுதாகி இருப்பதால், ஏற முடியாமல் அவதிப்படுவது பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை பதிவிட்ட தயாநிதி மாறன்,
It is very disheartening to see that public amenities and infrastructure meant and developed with the specific aim of easing the life of the general public, especially senior citizens, women and young children is in such condition even after several requests to the authorities to… pic.twitter.com/D0U8HDbOBb
"தினந்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிக்கும் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நகரும் படிக்கட்டுகள் பழுதடைந்த நிலையில் இருப்பதால் பயணிகள் அடையும் சிரமத்தை நேற்றைய தினம் சமூகவலைதளங்களி்ல் பயணி ஒருவர் பதிவிட்டு இருப்பதை கண்ட பிறகாவது ரயில்வே நிர்வாகம் விழித்துக்கொண்டு உடனடியாக அவற்றை சரிசெய்வதோடு, அனைத்து நடைமேடைகளிலும் ஏறுகின்ற மற்றும் இறங்குகின்ற வழிகளில் நகரும் படிக்கட்டுகளை அமைத்து நவீன இந்தியாவை உருவாக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
பரபரப்பு: இது குறித்து பலமுறை மண்டல கூட்டத்திலும், பலமுறை கடிதம் வாயிலாகவும் ரயில்வே அமைச்சகத்துக்கு தெரிவித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என்பதை வருத்தத்துடன் இங்கே பதிவு செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். தயாநிதி மாறனின் இந்த பதிவானது, இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.