சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அமெரிக்காவில் தனது விடுமுறையை கழித்து வருகிறார். அடுத்து சீன் ஐபிஎல் போட்டிக்காக தனது உடலையும், மனதையும் தயார்படுத்துவதில் தீவிரமாக இருந்த தோனி தற்போது அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்த அமெரிக்க பயணத்தின் போது, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தோனியை கோல்ஃப் விளையாட அழைத்துள்ளார். அடுத்த வருடம் அதிபர் தேர்தலில் போட்டிப்போட தயாராகி வரும் டொனால்டு டிரம்ப் தோனியின் அமெரிக்க வருகையை தெரிந்துக்கொண்டு அவரை கோல்ஃப் விளையாட அழைத்துள்ளார்.
டொனால்டு டிரம்ப்-இன் அழைப்பை ஏற்று தோனி அவரை சந்தித்து கோல்ஃப் விளையாடிய நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் தோனி உடன் டொனால்டு டிரம்ப் தனது கோல்ஃப் விளையாட்டு உடையில் ஒரு படத்தை கிளிக் செய்து வெளியிடப்பட்டதில் தப்போது வைரலாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் தோனியும் டிரம்பும் அருகருகே நின்று கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். தோனி நீண்ட தலைமுடியும், தாடியும் கொண்டு புதிய லுக்கில் உள்ளார். இந்த போட்டோ உடன் வீடியோவும் ஒன்ற வெளியாகியுள்ளது. மேலும் புகைப்படம் கொண்ட பதிவில் தல ஃபீவர் இன் USA என பதிவிடப்பட்டு உள்ளது.
மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இதேபோல் தோனியின் புகழ் உச்ச இதுவரையில் யாராலும் தொட முடியவில்லை, பொதுவாக எதிரணிகள் மற்ற கிரிக்கெட் வீரர்கள் போட்டியாக மட்டுமே பார்த்த நிலை இருந்தது.
ஆனால் தோனியை அனைவரும் ஒரு இன்ஸ்பிரேஷனாக பார்த்தனர், இந்திய அணி வீரர்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு அணி வீரர்களும் தோனியிடம் வந்து டிப்ஸ் கேட்ட தருணங்கள் நிறைய உள்ளது. இதனால் தோனியின் புகழ் உச்சியில் டொனால்டு டிரம்ப்-ன் அழைப்பு முக்கியமானதாக இருக்கும்.