சென்னையில் பிரபல மதுபான பாரில்.. குடிமகன்கள் முன்பு அந்த கோலத்தில் அழகிகள்.. ஆடிப்போன போலீஸ்

post-img
சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தனியார் மதுபான பார் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மதுபான பாரில் குடிக்க வரும் குடிமகன்களை உற்சாகப்படுத்த தனியார் மதுபான பார் நிர்வாகம் செய்த செயல் போலீசாரை ஆடிப்போகச் செய்துள்ளது. இதை கேள்விப்பட்டு உடனே விரைந்து சென்று மாறுவேடத்தில் கண்காணித்த போலீசாரை, பார் ஊழியர்கள் மிரட்டி தகராறில் ஈடுபட்டார்களாம். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம். இன்றைக்கு மதுபான பார்கள் அதிகமாகி விட்டது. போட்டியை சமாளிக்க பல்வேறு வியூகங்களை மதுபான பார் உரிமையாளர்கள் கையில் எடுக்கிறார்கள். அதன் படி தனியார் மதுபான பார்களை நவீன மயமாக்கி குடிமகன்களை கவர்கிறார்கள். குடிமகன்களுக்கு நொறுக்த்தீனி, லைட்டிங், தியேட்டர் அளவிற்கு செட்டப் என்று பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கும். அந்த அளவிற்க மதுபான பார்களை மேம்படுத்தி குடிமகன்களை கவர்கிறார்கள். இது எல்லாமே எல்லா ஊர்களிலும் இருப்பது தான். ஆனால் சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள தனியார் மதுபான பார்களில் அந்த காலங்களில் இருந்தது போல் ஒரு செட்டப்பை உருவாக்கி குடிமகன்களை கவரும் முயற்சியில் இறங்கி உள்ளனர். அதாவது கவர்ச்சி அழகிகளை நடனமாட வைத்து உற்சாக மூட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி மெதுவாகதகவல்கள் அந்த பகுதியில் பரவியது. இதனிடையே குறிப்பிட்ட சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனியார் மதுபான பாருக்கு வரும் மதுப்பிரியர்களை கவர்ந்திழுக்கவும், உற்சாகப்படுத்துவதற்கும் அழகிகள் மூலம் ஆபாச நடன நிகழ்ச்சி நடைபெற்று வருவதாக எம்.ஜி.ஆர். நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை உறுதி செய்ய வேண்டி, குறிப்பிட்ட மதுபான பாருக்கு, பெண் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் மாறு வேடத்தில் சென்று கண்காணித்தனர். அப்போது, அங்கு நடன அழகிகள் மூலம் ஆபாச நடனம் நடந்ததது. குறிப்பாக 2 இளம் பெண்கள் மேடையில் ஆபாசமாக மதுக்குடிப்பவர்கள் முன்பு நடனமாடி கொண்டிருந்ததை போலீசார்கள் பார்த்தார்களாம். இதையடுத்து மாறுவேடத்தில் சென்ற போலீசார், பாரின் உள்புற பகுதிகளை சோதனையிட முயற்சித்துள்ளனர். அப்போது ஊழியர்கள் 5 பேர் போலீசாரை தடுத்து நிறுத்தி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பாரில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதோடு, தங்களை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதால் போலீசார் கைது செய்தனர். அங்க தகராறில் ஈடுபட்ட ஊழியர்கள் சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த தாணு (வயது 47), விருதுநகர் மாவட்டம், சிவகாசி கிழக்கு பகுதியை சேர்ந்த விஜய் அமிர்தராஜ் (38), அதே மாவட்டம் தொப்பலாகரை கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (31), எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கோடிஷ் (26), பாலமுருகன் (22) ஆகிய 5 பேரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Related Post