சென்னை: விசிகவில் இருந்து அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இந்நிலையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டதற்காக விசிக மாநிலப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் ஏன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனக் கேட்டுள்ள அதிமுகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், விசிகவுக்காக திமுகவினர் மீது அக்கட்சி நடவடிக்கை எடுக்குமா? என வினவியுள்ளார்.
சென்னையில் கடந்த 6ஆம் தேதி வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம், விகடன் இணைந்து வெளியிடும் ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தின் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளரும், நூலை உருவாக்கியவருமான ஆதவ் அர்ஜுனா, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பேரனான ஆனந்த் டெல்டுண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பேசிய ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு, திமுகவையும், ஏன் அவரது கட்சியான விசிக நிர்வாகிகளையும் கூட கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.. தமிழகத்தில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும், திரைத்துறையில் கட்டுப்பாட்டை வைத்திருப்பது, ஊழல், வேங்கை வேல் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திமுகவை மறைமுகமாக சாடி இருந்தார். மேலும் விஜய், திமுக குறித்து பேச பேச கைதட்டி உற்சாகப்படுத்தினார்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளே தற்போது அவரை விமர்சித்து வருகின்றனர். ஆதவ் பேசியதில் தனக்கும் உடன்பாடில்லை என கூறியிருந்தார் திருமாவளவன். மேலும் அவர் மீது நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுகவினர் தங்கள் தலைவர்களையோ அல்லது தொண்டர்களையோ ஒருபோதும் வி.சி.க.வுக்காக சமரசம் செய்ய மாட்டார்கள் என கூறியுள்ளார் அதிமுகவைச் சேர்ந்தவரும் நடிகையுமான காயத்ரி ரகுராம். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,”வருத்தம். திமுகவினர் தங்கள் தலைவர்களையோ அல்லது தொண்டர்களையோ ஒருபோதும் வி.சி.கவுக்காக சமரசம் செய்ய மாட்டார்கள், சிறையில் அடைக்கப்பட்ட மற்றும் ஊழல் செய்த செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கினர். திமுக அவரை இடை நீக்கம் செய்யவில்லை.
ஆனால் திமுகவிற்கு எதிராகப் பேசியதற்காக அம்பேத்கர் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டதற்காக விசிக மாநிலப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் ஏன் 'சமரச' இடைநீக்கம்? இது தொண்டர்களை ஒடுக்கும் செயல் அல்லவா? ஜனநாயகம் மற்றும் ஒருவரின் பார்வையை கேட்க வேண்டும். ஜனநாயகத்தை ஒடுக்க முடியாது. திமுக மன்னர் ஆட்சியை இனி அனுமதிக்க முடியாது." என கூறியுள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage