சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் 4 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் ஒரு சில தினங்களில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த சீரியலில் எதிர்பாராத வகையில் முடிவு வரப்போகிறது என்றும் கூறப்படுகிறது.
இது பற்றி பல தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில சீரியல்கள் தான் பல வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஒரு சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர் சீரியல் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் கிட்டத்தட்ட நான்கு வருடங்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. டிஆர்பியிலும் டாப் 10 இடங்களில் இந்த சீரியல் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது.
இந்த நிலையில் சமீப காலமாக இந்த சீரியல் சுவாரஸ்யம் குறைந்து விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரவு இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது. அதுவும் இந்த மாதத்தோடு இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் எதிர்பார்க்காத வகையில் சீரியல் முடிவும் இருக்கப் போகிறது என்று கூறப்படுகிறது.
அதாவது பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் அண்ணன் தம்பிகளுக்குள் பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்தது. அதையெல்லாம் வெற்றிகரமாக ஒவ்வொரு சூழலிலும் குடும்பத்தினர் கடந்து வந்து கொண்டே இருந்தனர். பல போராட்டங்களும் சந்தோஷங்களும் இவர்களுடைய வாழ்க்கையில் இருந்தாலும் சமீப காலமாக குடும்பத்தில் அடுத்தடுத்த பிரச்சனைகள் மட்டும்தான் இருக்கிறது. அதுவும் ஜீவா வீட்டைவிட்டு வெளியேறியதில் இருந்து அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தது.
அதையெல்லாம் ஒரு வழியாக இவர்தான் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் முடிவுக்கு கொண்டு வந்து இருக்கிறது. அந்த வகையில் பெரிய அளவில் பிரச்சினையாக இருந்த தனம் கேன்சர் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். கண்ணனும் எல்லா பிரச்சனைகளிலும் இருந்து மீண்டு வேலையில் இணைந்திருக்கிறார். இந்த நிலையில் இதுவரைக்கும் ஆரம்பத்தில் இருந்து பண திமிரில் ஆட்டம் போட்ட ஜனார்த்தனன் இப்போது அவருடைய இரண்டாவது மருமகனால் பிரச்சனையில் மாட்டி இருக்கிறார்.
இந்த நிலையில் ஜனார்த்தனன் பிஸினஸில் சரிவடைந்து அவமானப்பட்டு நிற்கும்போது பாண்டியன் ஸ்டோர் குடும்பம் அவருக்கு உதவி செய்து அவர்களுடைய பெருந்தன்மையை காட்டுவது போன்று சீரியல் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஜனார்த்தனன் பல நேரங்களில் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அவருக்கு பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் உதவி செய்திருக்கிறார்கள். ஆனால் அவர் அதை மறந்து இருக்கிறார். ஆனால் சீரியலின் முடிவில் கூட அவருக்கு பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் உதவி செய்வது போன்று தான் கதை வர இருக்கிறது என்று கூறப்படுகிறது.