டெல்லி: அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து சென்னை உட்பட நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மாணவர்கள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மாநிலக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று கண்டனப் போராட்டம் நடத்தினர். ஆனால் அம்பேத்கரை காங்கிரஸ் இழிவுபடுத்தி விட்டதாக கூறி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பிக்கள் போட்டி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அதே டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்களும் அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பிக்கள் திடீர் போராட்டம்
அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்ததாக பாஜக எம்பிக்கள் டெல்லியில் போராட்டம்