பெரிய பிரளயமே வந்திருக்கும்.. வாயை விட்ட அர்ஜுனா.. சரியாக திட்டமிட்டு தவிர்த்த திருமாவளவன்!

post-img

சென்னை: 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய சில விஷயங்கள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு கடுமையான தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று சென்னையில் நடந்த எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்துகொண்டார் . பெரும் சர்ச்சைகள், விவாதங்களுக்கு இடையே இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அதன் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார்.

இதில் ஆளும் திமுகவை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்து ஆதவ் அர்ஜுனா கடுமையாக பேசி இருந்தார். அதில், பிறப்பால் முதலமைச்சர் உருவாக்கப்படக் கூடாது!" மன்னராட்சி தான் இங்கு இருக்கிறது; மன்னராட்சியை கேள்வி கேட்டால், சங்கி என்று சொல்கிறார்கள்;
அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை; 2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்; பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாக்கப்படக் கூடாது; தமிழ்நாட்டை ஒரு கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும்; தமிழ்நாட்டு மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவு எடுத்துவிட்டார்கள். ஒட்டுமொத்த சினிமாத்துறையையும் அரசியல் மூலம் ஒரு நிறுவனம் கட்டுப்படுத்துகிறது. எல்லோரும் சமம் என்று சொல்வதுதான் திராவிடம்; தமிழ்த் தேசியம் என்றாலும், பிரபாகரன் சொன்னது போல எல்லோரும் சமம் என்பதுதான்.

கொள்கைகளைப் பேசிக்கொண்டு ஆட்சிக்கு வந்து ஊழலைச் செய்யக்கூடிய நிலை இருக்க கூடாது. "மன்னராட்சியைக் கேள்வி கேட்டால் சங்கி என்று சொல்வார்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால், தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டார்கள். 2026-ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும். பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராகக் கூடாது, என்றெல்லாம் பேசினார்.
தாக்கு: இதில் பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாக்கப்படக் கூடாது; தமிழ்நாட்டை ஒரு கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும். ஒட்டுமொத்த சினிமாத்துறையையும் அரசியல் மூலம் ஒரு நிறுவனம் கட்டுப்படுத்துகிறது என்றெல்லாம் உதயநிதி ஸ்டாலினை ஆதவ் அர்ஜுனா தாக்கி மறைமுகமாக பேசி உள்ளார்.
இந்த மேடையில் திருமா இருந்திருந்தால் இன்றே கூட கூட்டணி முறிந்திருக்கும். அல்லது கூட்டணியில் பெரிய பிரளயமே வெடித்து இருக்கும். ஆனால் சுதாரித்து திருமா இந்த கூட்டத்தை தவிர்த்து உள்ளார்.

முன்னதாக திருமா இதை பற்றி செய்த விமர்சனத்தில், நடிகர் விஜய் இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் என்பது ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட எங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், திடுமென ஒரு தமிழ் நாளேடு இதனை பெரிய செய்தியாக- தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.
திரு. விஜய் அவர்களின் கட்சி மாநாட்டுக்குப் பிறகு அவ்வாறு வெளியிட்டது. அதாவது,
"டிசம்பர்-06, விஜய் - திருமா ஒரே மேடையில்" என தலைப்புச் செய்தி வெளியிட்டு, ஒரு நூல் வெளியீட்டு விழாவைப் பூதாகரப்படுத்தி அந்நாளேடு அதனை அரசியலாக்கியது.
இது தான் அவ்விழாவைப் பற்றிய 'எதிரும் புதிருமான' உரையாடல்களுக்கு வழிவகுத்தது. பல்வேறு யூகங்களுக்கும் இடமளித்தது. குறிப்பாக, மரபு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் அவை கூட்டணி தொடர்பான உரையாடல்களாக அரங்கேறின.
ஒரு நூல்வெளியீட்டு விழாவாக, அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறியிருக்க வேண்டிய நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசியது அந்த நாளேடு தான். அது ஏன்? அந்த நாளேட்டுக்கு அந்தத் தகவல் எப்படி கிடைத்தது?
அதாவது, விகடன் பதிப்பகத்தில் ஒரு சிலருக்கும், 'விஓசி' நிறுவனத்தில் ஓரிருவருக்கும், அடுத்து எனக்கும் மட்டுமே அப்போதைக்குத் தெரிந்திருந்த அச்செய்தி, எப்படி அந்த நாளேட்டின் கவனத்துக்குப் போனது?
அதிகாரப்பூர்வமாக விகடன் பதிப்பகமோ, விஓசி நிறுவனமோ உறுதிப்படுத்தாத ஒரு செய்தியை அந்த நாளேடு ஏன் பூதாகரப்படுத்தியது? அதற்கு ஏன் திட்டமிட்டு அரசியல் சாயம் பூசியது?, என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Post