பொறியியல் படிக்க போறீங்களா? ரேண்டம் எண்கள் விதியில் மிகப்பெரிய மாற்றம்..

post-img

2023-24ம் கல்வியாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கும் போது 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளுக்கு வகுப்புகளுக்கு திறக்கப்பட உள்ளன. பள்ளிகளில் ஏற்கனவே அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அதேபோல் கல்லூரிகளிலும் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை நிறைவு பெற்றுள்ளது. இந்த முறை 12ம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்கள் பலரும் அரசு கலை கல்லூரிகளில் சேர விண்ணப்பம் செய்துள்ளனர்.

அதன்படி கடந்த மாதம் 8ம் தேதியில் இருந்து 3 வாரமாக கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பிக்க கடந்த 22ம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டது.

முதலில் 19ம் தேதி இந்த விண்ணப்பம் நிறைவு அடைவதாக இருந்தது. ஆனால் மாணவர்கள் நலன் கருதி மேலும் 3 நாட்கள் இந்த விண்ணப்பங்கள் நீட்டிக்கப்பட்டது. கடந்த 22ம் தேதியோடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து tngasa.in என்ற தளத்தில் மாணவர்கள் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

அதன்பின் கடந்த மாதம் 25ம் தேதி தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியானது. இதையடுத்து கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடந்து முடிந்தது.

TNEA: Third round of engineering counselling begins

முதல் கட்ட கலந்தாய்வு ரேங்க் அடிப்படையில் நடந்து முடிந்த நிலையில் 2ம் கட்ட கலந்தாய்வு இந்த மாதம் 12ம் தேதி தொடங்கியது. ஜூன் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-ம் கட்ட கலந்தாய்வு நடந்தது. இன்று ஜூன் 22-ந்தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும் நிலையில், இன்னொரு பக்கம் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்த மாணவர்கள் தங்களின் ரேண்டம் எண்களுக்காக காத்து இருக்கிறார்கள்.

பொறியியல் கலந்தாய்வு: ஜூலை 7-ந்தேதி முதல் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பொது கலந்தாய்விற்கு முன்பே சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 2023-24ம் கல்வியாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கும் போது 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்களித்து, மாணவர் சேர்க்கைக்கான விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2021-22 ம் கல்வியாண்டில் கொரோனா தொற்று காரணமாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ்கள் வெளியிடப்பட்டது. இதனால் ரேண்டம் எண்களை உருவாக்கும் போது இந்த மதிப்பெண்ணை கணக்கிட வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பல மாணவர்கள் ஒரே கட் ஆப் பெற்றுள்ள போது ரேண்டம் எண்களை வைத்து கணினி ரேங்க் கொடுக்கும்.

இதற்கு அவர்கள் பிறந்த தேதி, 10ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படும். ஆனால் இந்த முறை அந்த மதிப்பெண் கணக்கில் எடுக்கப்பட்டது. ஏனென்றால் 2 வருடங்களுக்கு முன் கொரோனா காலத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ்கள் வெளியிடப்பட்டது. இதனால் அந்த மதிப்பெண் இந்த முறை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

Related Post