சீர்காழி மக்களுக்கு ஒரு குட் நியூஸ்... இனி வழக்கம்போல் ரயில்கள் நின்று செல்லும்!

post-img

கொரோனா பேரிடரில் தடைசெய்யப்பட்ட அனைத்து ரயில்களும் வழக்கம் போல் சீர்காழியில் நின்று செல்லும் என 

சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையத்தில் நாளொன்றுக்கு 40 க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக நெடுந்தூரம் செல்லும் ரயில்கள் சீர்காழி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் நிலை உருவானது.

 

கொரோனா கட்டுப்பாடுகள் நிறைவடைந்து மூன்று ஆண்டுகளை கடந்த நிலையிலும் சீர்காழியில் ரயில்கள் நிற்காமல் செல்கின்றன. இதனால் ரயிலில் பயணிக்கும் பொதுமக்கள் சிதம்பரம் அல்லது மயிலாடுதுறை ரயில் நிலையங்களில் இறங்கி அங்கிருந்து சீர்காழிக்கு செல்லும் கட்டாயம் உள்ளது.

மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து சீர்காழிக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால்

 

பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே 2020 வரை இரு வழி மார்க்கமாக சீர்காழியில் நின்று சென்ற அனைத்து ரயில்களும் வழக்கம் போல் நின்று செல்ல வேண்டும் என  பொதுமக்கள், வணிகர்கள் உள்ளைட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

இந்நிலையில் இரு வழி  மார்க்கமாக 5 ரயில்கள் சீர்காழியில் நின்று செல்லும் என ரயில்வே மேலாளர் ஹரிகுமார்

உத்தரவிட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் சீர்காழியில் நிற்காமல் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸும் சீர்காழியில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்க உள்ளதாகவும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

Related Post