கான்பூர்: டேட்டிங் ஆப்ஸ் மூலம் காதலியை விபச்சார தொழிலுக்கு தள்ளியிருக்கிறார் இளைஞர்.. இது தொடர்பாக மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிரமான விசாரணையும் நடந்து வருகிறதாம். என்ன நடந்தது உ.பி.யில்?
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகர பிரிவு போலீசார், கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 பேரை கைது செய்திருந்தனர். இதில் 3 பேர் இளைஞர்கள், மற்ற இருவரும் இளம்பெண்கள் ஆவார். விபச்சாரம் செய்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதையடுத்து, கைதானவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த 5 பேரும் சொன்ன தகவலை கேட்டு, போலீசாரே திகைத்து போய்விட்டார்களாம்.
யாரிந்த லாலு யாதவ்: இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் சொல்லும்போது, "கைது செய்யப்பட்டுள்ள லாலு யாதவ் என்பவர்தான் முக்கிய குற்றவாளி.. இவரது காதலியின் பெயர் அஞ்சலி.. இந்த அஞ்சலியின் உதவியுடன் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர், இளம் பெண்களை குறிவைத்து வைத்து பேசி, விபச்சாரத்தில் விழ வைத்துள்ளார்.
அதாவது, லாலு யாதவ் தன்னுடைய காதலியுடன் பல இடங்களில் சுற்றித்திரிவார்.. இவர்கள் இருவருக்குமே பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கம் என்பதால், இந்த விபச்சாரத்தை செய்து வந்திருக்கிறார்கள். இதற்கெனவே உள்ள டேட்டிங் என்ற ஆப்ஸ் மூலம் கஸ்டமர்களை அடையாளம் காணுவதும், அவர்களிடம் நெருங்கி பேசி வலையில் விழவைப்பதும் அஞ்சலியின் வேலையாகும். அதேபோல, கஸ்டமர்கள் சிக்கிவிட்டால், அவர்களை மிரட்டி பணம் பறித்துவிடுவது லாலு யாதவ் வேலையாகும்.
காரில் 2 பேர்: அப்படித்தான், நொய்டாவில் வசிக்கும் இளைஞன் ஒருவர், டேட்டிங் ஆப்ஸ் மூலம் பெண் ஒருவரை அழைத்துள்ளார்.. அந்தப் பெண்ணும் டேட்டிங்கு ஓகே சொல்லியிருக்கிறார். இறுதியில் 2 பேரும் காரில் ஜாலியாக சுற்றிவந்துள்ளனர்.. அப்போது, இளைஞனுடன் காரில் ஜாலியாக சுற்றிவந்த பெண், லாலு யாதவ்வுக்கு நைஸாக தகவல் தந்துவிட்டதாக தெரிகிறது.
அடுத்த சில நிமிடங்களில், லாலு யாதவ் உள்ளிட்ட சிலர், அந்த காரை சுற்றி வளைத்துள்ளனர். இதனால் காரிலிருந்த இளைஞர் எதுவும் புரியாமல் பீதியடைந்துவிட்டார்.. அந்த இளைஞரிடம் லாலு யாதவ், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கவைத்து ஜெயிலுக்கு அனுப்புவோம் என்று மிரட்டியிருக்கிறார்.
துணிச்சல் புகார்: ஆனால், அசராத அந்த இளைஞரோ, தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து, இந்த கும்பல் குறித்து புகார் அளித்தார். இந்த புகாரை விசாரிக்க சென்றபோதுதான், காதலியை வைத்து விபச்சார தொழிலில் லாலு யாதவ் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, லாலு யாதவ், அவருக்கு உதவிய மேலும் 3 இளைஞர்கள், 2 இளம்பெண்கள் என ஒட்டுமொத்த பேரும் கும்பலாக கைது செய்யப்பட்டனர்.
லாலு யாதவ் பிடியில் 12க்கும் மேற்பட்டோர் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.. இது தொடர்பாக தொடர் விசாரணையை நடத்தி வருகிறோம். இவர்களுக்கு வேறு ஏதேனும் கும்பலுடன் தொடர்புண்டா என்பதையும் விசாரித்து வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
டேட்டிங் ஆப்: அதாவது, டேட்டிங் ஆப்பில், பெண்களின் போட்டோக்களை பதிவிடுவாராம் அஞ்சலி.. இந்த போட்டோக்களை பார்த்துவிட்டு தங்களுக்கு வரும் அழைப்புகளைதான், காதல் ஜோடி குறிவைத்துள்ளது.
சம்பவத்தன்று, காரில் சென்று கொண்டிருந்த இளம்பெண், திடீரென தனக்கு 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டு இளைஞரிடம் டார்ச்சர் செய்தாராம். இதற்கு பிறகுதான், லாலு யாதவ் தரப்பினர், அந்த காரை வழிமறித்து ஏறிக்கொண்டு, பணம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். அப்போதுகூட, 2.4 லட்சம் ரூபாய் இளைஞர் தந்தாராம். எனினும், அந்த கும்பல் அதிக பணம் கேட்டு மிரட்ட துவங்கியதும்தான், சம்பந்தப்பட்ட இளைஞர் போலீசில் புகார் தர சென்றாராம்.
யார் யார் பாதிப்பு: தற்போது, மிரட்டி பணம் பறிக்கப்பட்ட 5 மொபைல் போன்கள் மற்றும் டெல்லி பதிவு எண் கொண்ட க்ரெட்டா கார் போன்றவற்றையும், இந்த கும்பலிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன், லாலு யாவத் பிடியில் சிக்கி, விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் மற்ற நபர்கள் யார் யார்? இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? போன்ற விசாரணையை போலீசார் கையில் எடுத்துள்ளனராம்.