டெல்லி: பாகிஸ்தான் உடனான போரின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உங்களை நிச்சயம் வியக்க வைக்கும். அதாவது போரின் போது இந்திய ராணுவம் அதிக அளவில் ஆணுறைகளை ஆர்டர் செய்தது. பல ஆயிரம் ஆணுறைகளை இந்திய ராணுவம் வாங்கியது.. இந்திய ராணுவம் ஏன் ஆணுறைகளை வாங்கியது ஏன்? எதிரிகளை விரட்ட இந்த ஆணுறைகள் எப்படிப் பயன்படுத்தப்பட்டது என்பது ஆச்சரியத்தைத் தரும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
போர்க் காலங்களில் எதிரிகளை வீழ்த்த பொதுவாக ராணுவம் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தும். சில நேரங்களில் நாம் யோசிக்காத வழிகளில் கூட யுக்தியைப் பயன்படுத்துவார்கள்.
இந்தியா பாகிஸ்தான் போர்:
அப்படி தான் இந்திய ராணுவம் ஆணுறைகளைப் போரில் பயன்படுத்தியுள்ளது. 1971ம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் போரின் போது தான் இது நடந்தது. 1971ம் ஆண்டு டிசம்பர் 3ல் தொடங்கிய இந்த போர் டிசம்பர் 16 அதாவது சுமார் இரண்டு வாரங்கள் நீடித்தது. இந்த போரில் இந்தியா வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்று இருந்தது. அப்போது தான் இந்த சுவாரசிய சம்பவம் நடந்தது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது அந்த காலகட்டத்தில் இந்திய விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. பல்வேறு முனைகளில் இருந்தும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் திக்குமுக்காடிப் போனது.. அந்த நேரத்தில் தான் பல ஆயிரம் ஆணுறைகள் ஆர்டர் செய்யப்பட்டன.
"அந்த" மாதிரி பொருட்களை நள்ளிரவு நேரத்தில் அதிகம் ஆர்டர் செய்யும் இளசுகள்.. இதுதான் டிரெண்டாம்!
ஆணுறைகள்:
போரின் போது, கிழக்கு பாகிஸ்தானின் (இன்றைய வங்கதேசம்) சிட்டகாங் துறைமுகத்தையும் இந்தியா குறிவைத்துத் தாக்கியது. அந்த மோதலின் போது, இந்திய ராணுவம் பாகிஸ்தான் போர்க் கப்பல்களை அழிக்கத் திட்டமிட்டனர். இதற்காக லிம்பெட் மைன் என்ற வெடிகுண்டைப் பயன்படுத்த வேண்டும். இந்த வெடிகுண்டைக் கடலில் நீரில் போட்டுவிட்டால்.. கப்பல் வரும் போது அதை வெடிக்கச் செய்யலாம். ஆனால் பிரச்சினை என்னவென்றால் நீர் உள்ளே ஏறுவதால் அது கப்பல் வருவதற்கு முன்பே வெடிக்கும் ஆபத்து இருந்தது.
அதிகபட்சம் 30 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என்ற சூழல் இருந்தது. இதைச் சமாளிக்கவே இந்திய ராணுவம் பல ஆயிரம் ஆணுறைகளை ஆர்டர் செய்தனர். லிம்பெட் வெடிகுண்டுகள் ஆணுறைகளில் வைக்கப்பட்டன. இதன் மூலம் வெடிகுண்டுகள் தண்ணீர் புகாமல் தடுக்கப்பட்டன. மேலும், சரியாகப் பாகிஸ்தான் கப்பல் வரும் நேரத்தில் அதை இந்தியா ராணுவத்தில் வெடிக்க வைக்க முடிந்தது. இதன் மூலம் குறுகிய காலத்தில் பல கப்பல்களை இந்திய ராணுவத்தால் தகர்க்க முடிந்தது.
1971 இந்தியா பாகிஸ்தான் போர்:
1971 இந்தியா பாகிஸ்தான் போரில் சிட்டகாங் துறைமுக செயல்பாடுகளை முடக்க இந்திய ராணுவத்திற்கு இந்த யுக்தி பெரியளவில் கை கொடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தானின் கப்பல் மற்றும் விநியோக ரூட்களை இந்தியாவால் எளிதாக முடக்க முடிந்துள்ளது. இதன் மூலம் வெறும் இரண்டு வாரங்களில் போரை மொத்தமாக முடிவுக்குக் கொண்டு வரவும் இந்தியாவால் முடிந்தது. பாகிஸ்தான் ராணுவம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.