கிரெடிட் கார்டு இருக்கா? உச்சநீதிமன்ற உத்தரவால் வந்த சிக்கல்! மிஸ்ஸானால் லட்சக்கணக்கில் பணம் போகும்

post-img
டெல்லி: கிரெடிட் கார்டு கடன்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் 30 சதவீதத்துக்கு மேல் வட்டி விதிக்க இருந்த தடையை உச்சநீதிமன்றம் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வட்டிக்கு மேல் வட்டி என்று ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் பணத்தை செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். நம்மில் பலரும் கிரெடிட் கார்டு பயன்டுத்துவதை வழக்கமாக வைத்திருப்போம். திடீரென்று ஏற்படும் செலவுகளின்போது தனிநபர்களிடம் கடன் வாங்காமல் கிரெடிட் கார்டு மூலம் நம்மால் செலவு செய்ய முடியும். இருப்பினும் கிரெடிட் கார்டுகளுக்கான கடனை குறித்த காலக்கெடுவுக்கும் நாம் செலுத்த வேண்டும். ஒருவேளை குறித்த காலத்துக்குள் அந்த கடனை செலுத்தாவிட்டால் வட்டி வழங்க வேண்டி இருக்கும். இந்த வட்டி என்பது 30 சதவீதத்துக்கு மேல் இருக்க கூடாது என்பது விதியாக உள்ளது. அதாவது கிரெடிட் கார்டு கடன்களுக்கான வட்டி என்பது அதிகபட்சமாக 30 சதவீதம் தான் இருக்க வேண்டும் என்பதை என்சிடிஆர்சி எனும் நுகர்வோர் தகராறுகள் நிவர்த்தி ஆணையம் (NCDRC or National Consumer Disputes Redressal Commission) கடந்த 2008ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, சிட்டி வங்கி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன்( எச்எஸ்பிசி) உள்ளிட்ட நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதிகள் பேலா திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் தீர்ப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு தான் தற்போது கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களின் தலையில் இடியை இறக்கி உள்ளது. அதாவது 2008 ம் ஆண்டில் தேசிய நுகர்வோர் தகராறுகள் நிவர்த்தி ஆணையம் வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது கிரெடிட் கார்டு கடன்களுக்கு அதிகபட்ச வட்டியாக 30 சதவீதத்துக்கு மேல் இருக்க கூடாது என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் கிரெடிட் கார்டு வழங்குவோர் அதற்கான வட்டியை 30 சதவீதத்துக்கும் மேலாக விதிக்கலாம். அப்படியென்றால் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் உரிய காலத்தில் கடன் செலுத்தாவிட்டால் ஆயிரம் முதல் லட்சக்கணக்கணக்கில் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது ஆறுதலான விஷயமாக இருந்தாலும் கூட தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பால் து கிரெடிட் கார்டு வைத்திருப்போரை கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்க நேரிடும்.

Related Post