சிறு வணிகர்களுக்கு ரொம்ப கம்மி வட்டியில்.. ரூ.10,000 முதல் 1 லட்சம் வரை கடன்.. முகாம் எப்போ பாருங்க

post-img

சென்னை: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த சிறு வணிகர்களுக்கு சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நடத்தப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்... அத்துடன்., குறைந்த வட்டியில் ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை சிறு வணிகக்கடன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை கொட்டித்தீர்த்தது... குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டது.

மழை பாதிப்பு: இந்த மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நடத்தப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்காக சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம்ங்களை நடத்த முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
திட்ட முகாம்கள்: மேலும் இந்த சிறப்பு முகாம்கள் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக நடைபெறும் என்றும், முகாம் மூலமாக தகுதியானவர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.10,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை சிறுவணிகக்கடன் வழங்கப்படும் எனவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம்கள் இன்று முதல் வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த சிறு வணிகர்களுக்கு சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நடத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

முகாம்கள்: முன்னதாக அரசு தரப்பில் வெளியாகியிருந்த அறிக்கையில், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.10,000/- முதல் ரூ.1 லட்சம் வரை சிறுவணிகக்கடன் வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.. அத்துடன், யார் யார் பங்கேற்கலாம், யாரெல்லாம் கடன் பெற தகுதியானவர்கள் என்ற விவரமும் வெளியாகியிருந்தது..
அதன்படி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அட்டை உடைய தெருவியாபாரிகள், சிறு வணிகர்கள், வணிக உபயோகத்திற்காக மின் இணைப்பு பெற்ற சிறு கடை வியாபாரிகள், தெருவோரங்களில் வியாபாரம் செய்யும் பூ வியாபாரிகள், காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்பவர்கள், சாலையோர உணவகங்கள் நடத்துபவர்கள், கைவினைஞர்கள், மீனவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் (புயலால் பழுதடைந்த ஆட்டோவினை சீரமைக்க), அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதையில் கடை வைத்திருப்பவர்கள் ஆகிய சிறு வணிகர்கள்/சிறு, குறு தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தின் மூலம் கடன் பெற தகுதியானவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post