சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாட்டு பேச்சில் பாசிசம் - பாயசம் என்று பேசியதும்.. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அவர் களத்தில் பணி செய்வதை கிண்டல் செய்து பேசியதும் சர்ச்சையாகி உள்ளது.
இது தொடர்பான விமர்சனங்கள் நடிகர் விஜய்க்கு சென்றுள்ளது.. விஜய் இது தொடர்பாக விரைவில் விளக்க அறிக்கை வெளியிடுவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் பேசிய சில விஷயங்கள் சரியாக இல்லை.. அவருக்கே எதிராக இது திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.
Image credits:Vikatan
விஜய் என்ன பேசியது: 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசிய சில விஷயங்கள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது பேச்சில், நான் ஏன் மழை வெள்ளத்திற்கு நேரடியாக சென்று நிவாரணம் வழங்கவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். சம்பிரதாயத்துக்காக ட்வீட் போடறதும், அறிக்கை விடறதும், மழையில் நீரிலிருந்து போட்டோ எடுக்குறதும்... எனக்கு அதுல கொஞ்சம்கூட உடன்பாடில்ல. இனி என்ன பிரச்சனை.. எங்கே வந்தாலும் அங்கே நான் மக்களுடன் உடன் இருப்பேன்.
மணிப்பூர் விவகாரத்தைக் கண்டே கொள்ளாமல் மத்தியில் ஆட்சியில் செய்துவருகிறார்கள். வேங்கைவயல் விஷயத்தில் இங்கிருக்கும் சமூக நீதி அரசும் ஒன்றும் செய்யவில்லையே... இதையெல்லாம் அம்பேத்கர் பார்த்திருந்தால் வெட்கித் தலைகுனிந்திருப்பார்.
கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்போடு '200 வெல்வோம்’ என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு... என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. இருமாப்போடு 200 தொகுதிகளிலும் வெல்வோம் என்று சொல்பவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள், என்று கூறி இருந்தார்.
கிண்டல்: மழை காலத்தில் மக்களுடன் களத்தில் நின்று பணி செய்யும் அரசியல் தலைவர்களை.. நிவாரணம் வழங்கும் தலைவர்களை கிண்டல் செய்யும் விதமாக.. நான் ஏன் மழை வெள்ளத்திற்கு நேரடியாக சென்று நிவாரணம் வழங்கவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். சம்பிரதாயத்துக்காக ட்வீட் போடறதும், அறிக்கை விடறதும், மழையில் நீரிலிருந்து போட்டோ எடுக்குறதும்... எனக்கு அதுல கொஞ்சம்கூட உடன்பாடில்ல. இனி என்ன பிரச்சனை.. எங்கே வந்தாலும் அங்கே நான் மக்களுடன் உடன் இருப்பேன், என்றெல்லாம் பேசியது பற்றி அவருக்கு விமர்சனங்கள் சென்றுள்ளதாம்.
இதற்கு முன்பே பேச்சு: சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், ஒரு குழந்தை முன்பாக பாம்பை கண்டாலும் அந்தப் பாம்பை சிரித்தபடியே கையில் எடுத்து விளையாடும் அந்த குழந்தை. அதே போலத்தான் அரசியல் என்பது பாம்பு அந்த பாம்பை பயமே இல்லாமல் கையில் எடுத்து விளையாட வந்திருக்கிறேன். பாம்பு தான் அரசியல். அதை கையில பிடிச்சு விளையாட போறது தான் உங்க விஜய்.
பெரியார் எங்கள் கொள்கை தலைவர் என்றவுடன் ஒரு கும்பல் பெயிண்ட் டப்பாவை கையில் எடுத்து கிளம்பி இருப்பார்கள். பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று சொன்னதும்.. ஒரு கட்சி.. ஒரு குரூப் எங்களை எதிர்த்தது.
தவெக அறிவிக்கும் போதே கதறல் கேட்டுச்சு. இந்த மாநாட்டுக்கு அப்புறம் இன்னமும் கதறல் அதிகரிக்கும். நாம் அவர்களுக்கு மட்டும் எதிரியா? கிடையாது.. நமக்கு இன்னொரு எதிரியும் இருக்காங்க. ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என்று கூறி உள்ளோம். இதன் அர்த்தம் என்ன.. முகமுடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் தான் இப்ப நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். முகமுடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் அகற்றப்பட வேண்டும். இவர்களை எல்லாம் அகற்ற வேண்டும்.
யார் அரசியலுக்கு வந்தாலும் இவர்கள் கலர் பூசுகிறார்கள். நீ பாஸிசம்.. நீ அது.. நீ இது என்று கலர் அடிக்கிறார்கள். எனக்கு கலர் அடிக்க முடியாது. சொல்லிவிட்டேன். அவர்கள் பாசிசம் பேசுகிறார்கள் என்றால்.. நீங்கள் என்ன பேசுகிறீர்கள். நீங்கள் என்ன பாயாசமா பேசுகிறீர்கள், என்று நடிகர் விஜய் பேசி இருக்கிறார்.
விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்பு: இதில் நடிகர் விஜயின் பாசிசம் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்புகள் பதிவாகி வருகின்றன. பின்வரும் விமர்சனங்கள் இதில் வைக்கப்படுகின்றன. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாட்டு பேச்சில் பாசிசம் - பாயசம் என்று பேசியது சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பான விமர்சனங்கள் நடிகர் விஜய்க்கு சென்றுள்ளது.. பாசிசம் - பாயசம் என்று கிண்டல் செய்வது எல்லாம் தவறானது என்று அவருக்கு விமர்சனங்கள் சென்றுள்ளன.
Weather Data Source: Wettervorhersage 21 tage