சென்னை: ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவரது சென்னையில் உள்ள ஆடம்பரமான வீடு பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.
கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளதை அடுத்து அவரைப் பற்றி சச்சின் டெண்டுல்கர் உட்படப் பலர் வீரர்கள் தங்களின் கருத்துகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் 'ஒரு GOAT ஓய்வுபெற்றது' என்று குறிப்பிட்டுச் சொல்லி அவரை புகழ்ந்து வருகின்றனர். சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான அஸ்வினின் ஓய்வு இந்திய அணிக்குப் பெரிய இழப்பாகும்.
அவரை இனிமேல் 'மஞ்சள் ஜெர்சி'யில் காண விரும்புவதாக நடிகர் தனுஷ் கருத்திட்டு அவரை வாழ்த்தி இருக்கிறார். இவரது ஓய்வு அறிவிப்பு குறித்துப் பதிவிட்டுள்ள சச்சின், "நான் எப்போதும் உங்களைப் பற்றி பெருமை கொண்டுள்ளேன். நீங்கள் கிரிக்கெட் விளையாட்டில் உங்கள் மனதையும் இதயத்தையும் ஒருமித்தநிலையில் அணுகி இருக்கிறீர்கள். உங்களது இரண்டாவது இன்னிங்ஸ்க்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்திருந்தார்.
விராட் கோலி அவரது பதிவில், " "கடந்த 14 ஆண்டுகளாக உங்களுடன் நான் விளையாடி வருகிறேன். இன்று நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்த போது அது என்னைச் சற்று உணர்ச்சிவசப்படுத்தியது. நாம் ஒன்றாகச் சேர்ந்து விளையாடி நாட்களின் நினைவுகள் எனக்கு எழுந்தன. உங்களுடன் இந்தப் பயணத்தில் ஒவ்வொரு பகுதியையும் நான் ரசித்துள்ளேன். நீங்கள் என்றும் இந்திய கிடிக்கெட்டின் ஜாம்பவான் என நினைவுகூரப்படுவீர்கள். அனைத்திற்கும் நன்றி நண்பா" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பும்ரா,ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, கவுதம் கம்பீர், முகம்மது கைஃ, இர்ஃபான் பதான்,சுரேஷ் ரய்னா எனப் பலரும் அவரைப் பற்றிய நினைவுகளை தொடர்ந்துபகிர்ந்து கொண்டுள்ளனர்.
அஸ்வின் இப்போது ஓய்வை அறிவித்தாலும் அவர் பிசியான மனிதராகவே வலம் வருகிறார். அவர் நிறைய பிராண்டுகளில் முதலீடு செய்துள்ளார். பல நிறுவனங்கள் அவரை விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன் மூலம் அவருக்குத் தேவையான வருமான வருகிறது. மேலும் மாவட்ட ரீதியாக சென்று கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தும் வருகிறார். அவரது யூடியூப் தளம் பல லட்சக் கணக்கான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. அதில் அவர் நிறைய தனிப்பட்ட கண்டெண்ட்டுகளை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.
சீனியர் மற்றும் ஜூனியர் எனப் பார்க்காமல் சக வீரர்களைச் சந்தித்து ஜாலியாக பேட்டிகளை எடுத்து அதனைத் தனது சேனலில் பதிவேற்றம் செய்தும் வருகிறார். அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் கிரிக்கெட் செய்து வருகிறார். அஸ்வின் சென்னையைச் சேர்ந்தவர் என்பதில் தமிழ்நாட்டு மக்களுக்குப் பெருமை. அவரது பிடெக் இஞ்சினியரிங் படித்த அஸ்வின் சிறுவயது முதலேகிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். அவரது வீடு மேற்கு மாம்பலத்தில்தான் இருக்கிறது. அவரது மனைவி பிரித்தீ மற்றும் இரண்டு மகள்கள், பெற்றோர்களுடன் அவர் வசித்து வருகிறார். இந்தக் குடும்பத்தின் உறுப்பினராக இரண்டு செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறார் அஸ்வின்.
இந்த வீடு பற்றிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஸ்வின் பகிர்ந்து கொண்டுள்ளார். அழகான பச்சை புல் நிறைந்த தோட்டம், ஆடம்பரமான வரவேற்பறை, மாடர்ன் கிச்சன், சொகுசான படுக்கை அறை என பல வசதிகளைக் கொண்டுள்ள இந்த வீட்டின் விலை 9 கோடி எனத் தெரிகிறது. அவரது வீட்டுப் புகைப்படங்களைப் பார்க்கும் போது அதன் உட்புறத் தோற்றம் ஏதோ நட்சத்திர ஹோட்டலைப் போல அலங்காரம் செய்யப்பட்டு காட்சி அளிக்கிறது. இதைப் பார்க்கும் போது வீடு எனச் சொல்வதை விட ராயல் ஹவுஸ் என்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும்.
இதுவரை தனது கிரிக்கெட் விளையாட்டு மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த அவர் தொடர்ந்து வேறு வடிவங்களில் பலரையும் கவர்ந்து இழுப்பார் என உறுதியாக நம்பலாம். அவருக்கு நம் வாழ்த்துகள்.